ஆபாசப் படம் அவ்வளவு முக்கியமானதா??? பெற்றோர் மீதே வழக்குத் தொடுத்த மகன்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வரும் டேவிட் வொர்க்கிங் எனும் 42 வயதான நபர் தன்னுடைய பெற்றோரிடம் இழப்பீடு கேட்டு ஒரு விசித்திரமான வழக்கை பதிவு செய்திருக்கிறார். அந்த வழக்கில் தான் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னுடைய செல்போனில் உள்ள ஆபாச வீடியோக்களின் தொகுப்பு அழிக்கப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் என்னுடைய அனுமதி இல்லாமலே எனது பெற்றோர்கள் இப்படி செய்து விட்டார்கள். இது முற்றிலும் தவறானது. இதற்கு இழப்பீடு தர வேண்டும் என வழக்குத் தொடுத்து இருக்கிறார்.
டேவிட்டின் செல்போனில் ஒன்று… இரண்டல்ல, 25,000 டாலர் மதிப்பிலான ஆபாச வீடியோக்களின் தொகுப்பே இருந்து இருக்கிறது. இந்தத் தொகுப்பு முழுவதையும் அவரது பெற்றோர் அழித்து இருக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட் தனது பெற்றோர் மீதே இழப்பீடு கேட்டு வழக்கும் தொடுத்து இருக்கிறார். இதெல்லாம் ஒரு வழக்காக விசாரிக்கப்படுமா என நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஆனால் மிச்சிகன் நிதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதோடு உரிய இழப்பீட்டுத் தொகையை டேவிட்டுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.
ஆனால் எவ்வளவு தொகை என்பது இன்னும் முடிவு செய்யப்படாமல் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி ஒரு விசித்திர வழக்கைப் பார்த்த பலரும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு தனிநபரின் சுதந்திரத்தில் தலையிட பெற்றோருக்குக்கூட சில நேரங்களில் உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தீமையான விஷயங்களைக் கூட கேள்விக் கேட்க முடியாத அளவிற்கு நவீனச் சமூகம் வளர்ந்து விட்டது என்பதையே இந்த வழக்கு காட்டுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout