ஒருநாளைக்கு ஒரு பெக்கோட நிறுத்துங்க… அமெரிக்க மக்களை எச்சரிக்கும் புது விதிமுறை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க மக்களிடையே நாளுக்கு நாள் மது பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதனால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்நாட்டின் உணவு வழிகாட்டலுக்கான விவசாயத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதில் பெண்களை விட ஆண்கள் இரண்டு மடங்கு அதிக மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மது வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் புற்றுநோய், பெருங்குடல், மார்பக நோய் போன்றவை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இதனால் மக்களிடையே காணப்படுகின்ற மது பழக்கத்தை குறைக்கும் வகையில் விவசாயத்துறை அமெரிக்க மக்களுக்குச் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.
அந்த ஆலோசனைகளில் ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை (கிளாஸ்) என்ற அளவில் மட்டுமே மது வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. காரணம் அந்நாட்டில் ஆண்கள் அதிகமாக மது அருந்துவதாகவும் அதனால் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டி காட்டியிருக்கிறது. அதிலும் பெண்களை விட ஆண்கள் மதுவைக் குடித்துவிட்டு சீட் பெல்டை போடாமல் வாகனங்களை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம் மதுபோதைதான் என்றும் அதை அமெரிக்க மக்கள் குறைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் 8% மது பழக்கம் அதிகரித்து உள்ளதாக Wall stree journal குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் ஆண்கள் 5-7 கலோரி அளவும் பெண்கள் 3-4 கலோரி அளவும் மதுக்களை உட்கொள்கின்றனர் எனவும் தெரியவருகிறது. மேலும் 21 வயதிற்கு மேற்பட்ட மக்களிடம் 56% மது பழக்கம் இருப்பதாகவும் கொரோனா காலத்தில் இந்த விகிதம் தற்போது மேலும் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரமாக அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
முறையான மது பழக்கம் குறித்து ஆலோசனை வெளியிட்டுள்ள அமெரிக்க விவசாயத்துறை ஒருநாளில் ஆண்கள் 5-6 கிளாஸ் மது அருந்துவது என்பது மிக அதிகமான அளவு எனக் குறிப்பிட்டு இருக்கிறது. பெண்கள் 4 கிளாஸ்க்கு மேல் மது அருந்துவதும் தவறான வழக்கம் எனக் கூறியிருக்கிறது. இதனால் வாரத்திற்கு ஆண்கள் 15 கிளாஸ்களுக்கு மேல் தாண்டாமலும் பெண்கள் 8 கிளாஸ்களுக்கு மேல் தாண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. அதிலும் ஆண்களின் மதுபழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் என்று அந்த ஆலோசனை அறிக்கை விதிமுறை வகுக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments