ஒருநாளைக்கு ஒரு பெக்கோட நிறுத்துங்க… அமெரிக்க மக்களை எச்சரிக்கும் புது விதிமுறை!!!

  • IndiaGlitz, [Wednesday,August 19 2020]

 

அமெரிக்க மக்களிடையே நாளுக்கு நாள் மது பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அதனால் உடல்நல பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்நாட்டின் உணவு வழிகாட்டலுக்கான விவசாயத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதில் பெண்களை விட ஆண்கள் இரண்டு மடங்கு அதிக மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மது வகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் புற்றுநோய், பெருங்குடல், மார்பக நோய் போன்றவை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இதனால் மக்களிடையே காணப்படுகின்ற மது பழக்கத்தை குறைக்கும் வகையில் விவசாயத்துறை அமெரிக்க மக்களுக்குச் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

அந்த ஆலோசனைகளில் ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை (கிளாஸ்) என்ற அளவில் மட்டுமே மது வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. காரணம் அந்நாட்டில் ஆண்கள் அதிகமாக மது அருந்துவதாகவும் அதனால் பெண்களைவிட ஆண்களுக்கு அதிக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அந்த அமைப்பு சுட்டி காட்டியிருக்கிறது. அதிலும் பெண்களை விட ஆண்கள் மதுவைக் குடித்துவிட்டு சீட் பெல்டை போடாமல் வாகனங்களை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம் மதுபோதைதான் என்றும் அதை அமெரிக்க மக்கள் குறைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் 8% மது பழக்கம் அதிகரித்து உள்ளதாக Wall stree journal குறிப்பிட்டு இருக்கிறது. இதனால் ஆண்கள் 5-7 கலோரி அளவும் பெண்கள் 3-4 கலோரி அளவும் மதுக்களை உட்கொள்கின்றனர் எனவும் தெரியவருகிறது. மேலும் 21 வயதிற்கு மேற்பட்ட மக்களிடம் 56% மது பழக்கம் இருப்பதாகவும் கொரோனா காலத்தில் இந்த விகிதம் தற்போது மேலும் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரமாக அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

முறையான மது பழக்கம் குறித்து ஆலோசனை வெளியிட்டுள்ள அமெரிக்க விவசாயத்துறை ஒருநாளில் ஆண்கள் 5-6 கிளாஸ் மது அருந்துவது என்பது மிக அதிகமான அளவு எனக் குறிப்பிட்டு இருக்கிறது. பெண்கள் 4 கிளாஸ்க்கு மேல் மது அருந்துவதும் தவறான வழக்கம் எனக் கூறியிருக்கிறது. இதனால் வாரத்திற்கு ஆண்கள் 15 கிளாஸ்களுக்கு மேல் தாண்டாமலும் பெண்கள் 8 கிளாஸ்களுக்கு மேல் தாண்டாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. அதிலும் ஆண்களின் மதுபழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த ஒருநாளைக்கு ஒரு கிளாஸ் என்று அந்த ஆலோசனை அறிக்கை விதிமுறை வகுக்கிறது.

More News

மூணாறு நிலச்சரிவு சம்பவம்- பலி எண்ணிக்கை 61 ஆக உயர்ந்த அவலம்!!!

கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை அடுத்த ராஜமலா, பெட்டிமாடா பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 61 பேர் உயிரிழந்து

 ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  கேவியட் மனு தாக்கல்!!!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு கழிவுகள் வெளியாகி அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

செல்ல நாய்க்குட்டியுடன் பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம்ரவி நாயகி!

நடிகர் நடிகைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே அதில் ஒரு பெரிய கூட்டம் கூடும் என்றும் திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து கொண்டாடுவார்கள் என்பதும் தெரிந்ததே

தளபதி விஜய்க்கு ஜோடியாகிறாரா விஜய்சேதுபதி பட நாயகி?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் கொரோனா வைரஸ் அபாயம் முடிவடைந்து திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட பின்னரே

எஸ்பிபிக்காக முக்கிய வேண்டுகோள் விடுத்த தளபதி விஜய்யின் தந்தை!

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் குணமடைய வேண்டும்