ஏப்ரல் 3 முதல் ஹெச்1-பி விசா நிறுத்தம். அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Saturday,March 04 2017]
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற நாளில் இருந்து நாளொரு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ஹெச்1-பி விசா வழங்கப்படுவது ஏப்ரல் 3ஆம் தேதி முதல் நிறுத்துமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக சற்று முன்னர் செய்தி வெளிவந்துள்ளது. ஏப்ரல் 3 முதல் 6 மாத காலத்திற்கு ஹெச்1- பி விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமேரிக்கா தெரிவித்துள்ளதால் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் கடுமையாக பதியாக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் உள்நாட்டு ஊழியர்களின் வேலை வாய்ப்பை வெளிநாட்டில் இருந்து வருவோர் தட்டி பறிப்பதாகவும் உள்நாட்டு ஊழியர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.