கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்காகப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியை தற்போது இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இந்தியாவைத் தவிர அவசரகால அடிப்படையில் உலகின் பல நாடுகளுக்கும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தடுப்பூசியை தற்போது அமெரிக்காவில் பயன்படுத்த அந்நாட்டின் ஒகுஜென் நிறுவனம் சார்பில் அனுமதி கோரப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஒகுஜென் நிறுவனம் அமெரிக்காவில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்த கூடுதல் பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்குமாறும் அந்நட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது.

இதற்கு முன்பு கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு WHO அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால் இந்தத் தடுப்பூசியை இம்யூன் பாஸாக எடுத்துக் கொள்ள முடியாது எனப் பல தரப்புகளில் இருந்தும் கருத்துகள் கூறப்பட்டது. மேலும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு இருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் சந்தேகம் கிளப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம் தன் நாட்டில் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.