5,000 பெண்களுடன் உடலுறவு… Excel Sheet போட்டு அலறவிட்ட தொழிலதிபர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் பாலியல் உறவு கொண்ட பெண்களின் விவரங்களை பட்டியல் போட்டு வைத்துள்ளதாகவும் அந்தப் பட்டியலில் 5,000 பெண்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிலிக்கான் நகரில் அலுவலகம் வைத்திப்பவர் மைக்கேல் கோகன். மிகப்பெரிய பணக்காரரான இவர் மீது அவரது அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். அதில் கோகன் பெண்களைத் துன்புறுத்தி பாலியல் உறவுக்கொண்டதாகக் குற்றம்சாட்டியதோடு இதுவரை அவர் 5,000 பெண்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளார் என்றும் அந்தப் பெண்களின் விவரங்களை எக்ஸெல் வடிவத்தில் சேகரித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தகப்பனான கோகன் தன்னுடன் பாலியல் உறவுகொண்ட பெண்களின் விவரங்களை பாதுகாப்பான அறையில் வைத்திருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோகன் மீது 135 பக்கம்கொண்ட குற்றம் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வழக்குத் தொடர்பான அவரிடம் இருந்து 800 மில்லியன் டாலர் இழப்பீட்டு தொகை கேட்டுக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்துவரும் கோகன் கார்னெல் மற்றும் ஸ்டான்போர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் தன்னுடைய பட்டத்தைப் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் Sequoia capital எனும் நிறுவனத்தில் பணிப்புரிய துவங்கி அதே நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்துள்ளார். ஆனால் அவரது முதலாளி ஆம்பர் பாப்டிஸ்ட் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தப்பின்பு அந்த நிறுவனத்தில் இருந்து விலகி தற்போது சொந்த நிறுவனத்தை கவனித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout