சுமயாவை நாங்களே கொன்றோம்… பொதுவெளியில் மன்னிப்பு கோரிய அமெரிக்கா!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற ட்ரோன் தாக்குதலுக்கு தற்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை பொதுவெளியில் மன்னிப்பு கோரியிருக்கிறது.
தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காபூல் விமான நிலையத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். தாலிபான்களின் ஆட்சியை கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே அனுபவித்து இருந்த மக்கள் எப்படியாவது ஆப்கனை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தனர். இதற்காக இரவு, பகலாக காபூல் விமான நிலையத்தையே பொதுமக்கள் அனைவரும் சுற்றிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுபடுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஐஎஸ் தீவிரவாதிகள் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதல் ஏறக்குறைய அமெரிக்க இராணுவத்தையும் குறி வைத்தே நடத்தப்பட்டது. இந்த விபத்தில் 12 அமெரிக்க வீரர்கள் உட்பட 72 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து தாலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்களை கூர்ந்து கவனித்து வந்த அமெரிக்க இராணுவம் காபூல் விமான நிலையம் அருகே நின்ற ஒரு கொரோல்லா காரைச் சந்தேகித்தது. அந்தக் காரை கிட்டத்தட்ட 8 மணிநேரம் கண்காணித்த பிறகு அதில் இருந்து ஏதோ இறக்குவதை உணர்ந்து கொண்ட அமெரிக்க இராணுவம் காரில் ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதைப் போலவும் அவர்கள் ஆயுதங்களை இறங்குவது போலவும் புரிந்துகொண்டது.
இதையடுத்து உடனடியாக அமெரிக்க இராணுவம் அந்த காரின்மீது ட்ரோன் ஆயுதங்களை பயன்படுத்தத் துவங்கியது. இந்த விபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 7 குழந்தைகள் மற்றும் 3 பெரியவர்கள் உயிரிழந்தனர்.
உண்மையில் அமெரிக்க இராணுவம் சந்தேகித்த அந்த காரில் பொதுமக்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் தண்ணீர் கேன்களை இறக்கி இருக்கின்றனர். இதை ஆயுதங்களாக எண்ணிய அமெரிக்க இராணுவம் அவசரப்பட்டு ஆயுதத் தாக்குதல் நடத்திவிட்டது. இதையடுத்து அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சுமையா எனும் 2 வயது குழந்தையும் அடக்கம். இந்தப் படுகொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்ட அமெரிக்க இராணுவம் தற்போது தனது தவற்றுக்கு மன்னிப்பு கோரி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout