ஆக்சன் இல்லைன்னா, ரியாக்சன் வந்திருக்காது: சூர்யா நடிப்பு குறித்து ஊர்வசி!

  • IndiaGlitz, [Wednesday,November 18 2020]

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக சூர்யாவின் நடிப்பு மற்றும் சுதா கொங்கராவின் திரைக்கதை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா, சுதாவை அடுத்து இந்த படத்தில் மிக அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றவர் நடிகை ஊர்வசி என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் நடிப்புக்கு இணையாக பல காட்சிகளில் ஊர்வசியின் நடிப்பு இருந்ததை படம் பார்த்தவர்கள் உணர்ந்தனர். குறிப்பாக சூர்யா தந்தையின் மரணத்திற்கு தாமதமாக வரும் காட்சியில் ஊர்வசியை தவிர வேறு யாராவது இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியுமா? என்பது சந்தேகமே. அதேபோல் ‘எப்படியாவது ஜெயிச்சுருடா’ என்ற ஒரு அன்னையின் ஏக்கம் கலந்த ஊக்கம் ஊர்வசியின் தனிச்சிறப்பாகும்.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த காட்சி குறித்து கூறியபோது, ’ஆக்சன் இல்லையென்றால் ரியாக்சன் வந்திருக்காது அதேபோல் சூர்யாவும் நானும் அழும் அந்த காட்சியில் சூர்யாவின் நடிப்பு தான் எனக்கு மோட்டிவேஷன். அவரது நடிப்பை பார்த்து மிரண்டு போய் தான் நானும் அவருக்கு இணையாக நடிக்க நடித்தேன் என்று கூறினார்.

மேலும் இயக்குநர் சுதா கொங்கரா இந்த காட்சியை எனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கூறி விட்டார் என்றும் இதற்காக நான் பல நாட்கள் தயார் செய்தேன் என்றும் அவர் கூறினார். இந்த காட்சியில் நான் கஷ்டப்பட்டு நடித்ததை விட இந்த காட்சி சரியாக மக்களிடம் போய் சேர்ந்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும், நான் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகளை கவனிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த காட்சி அப்படியே மக்களிடம் போய் சேர்ந்துள்ளது நான் உள்பட படக்குழுவினர் அனைவரும் சந்தோஷமாக உள்ளோம் என்று ஊர்வசி கூறியுள்ளார்.