லெஜண்ட் சரவணன் நடிகை பெற்ற உயரிய விருது… இந்திய அளவில் குவியும் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
“தி லெஜண்ட்“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா “2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஐகான் பிலிம்பேர்“ விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் ஸ்டைல் ஐகான், சிறந்த பேஷன் கலைஞர், நடிகை எனப்பல பரிமாணங்களோடு முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப்பல மொழிகளில் தயாரிக்கப்படும் பான் இந்தியா திரைப்படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். அந்த வகையில் லெஜ்ண்ட் சரவணன் அருள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “தி லெஜண்ட்” படத்தில் இணைந்து நடித்துவருகிறார்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவில் நடிகை ஊர்வசி ரவுடேலாவிற்கு இந்த ஆண்டிற்கான சர்வதேச ஐகான் பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. இதையடுத்து கடும் உற்சாகத்தில் இருக்கும் நடிகை ஊர்வசிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுகளைத் தெதெரிவித்து வருகின்றனர்.
“ஹேட் ஸ்டோரி 4“, “விர்ஜின் பானுப்பிரியா“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே கடும் வரவேற்பை பெற்ற நடிகை ஊர்வசி ரவுடேலா சமீபத்தில் சவுதி அரேபியா வழங்கும் கோல்டன் விசாவை பெற்று இந்திய அளவில் தனிக்கவனம் பெற்றார். இந்நிலையில் ஜியோ ஸ்டூடியோ தயாரிப்பில் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் இணைந்து நடித்து வரும அவர், “டூப் கயே“, “இன்ஸ்பெக்டர் அவினாஷ்“, “பிளாக் ரோஸ்“, “வெர்சேஸ் பேபி “ எனப்பல படங்களை கைவசம் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com