ரிஷப் பண்ட் பிறந்த நாளில் ஊர்வசி ரெளட்டாலா வெளியிட்ட வீடியோ: மீண்டும் எழுந்த சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரிஷப் பண்ட் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது முன்னாள் காதலியான நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவால் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ‘தி லெஜண்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்தவருமான ஊர்வசி ரெளட்டாலா, கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பின்னர் திடீரென இருவருக்கும் பிரேக்-அப் ஆனதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊர்வசி ரெளட்டா, ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் மோதி கொண்டதை அடுத்து நெட்டிசன்கள் இருவரையும் விமர்சனம் செய்து ட்ரோல் செய்தனர். குறிப்பாக ஊர்வசி அளித்த பேட்டியில், ‘ஒரு கிரிக்கெட் வீரர் பல மணி நேரம் நான் தங்கியிருந்த ஹோட்டல் லாபியில் எனக்காக காத்திருந்தார் என்றும் நான் அவரை சந்திக்க மறுத்து அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.

இதற்கு பதிலடியாக ரிஷப் பண்ட், ஒருசிலர் பிரபலம் அடைவதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக கூறி வருகின்றனர் என்று கூறியதை இருதரப்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று தனது 25வது பிறந்த நாளை ரிஷப் பண்ட் கொண்டாடி வரும் நிலையில் ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஹாப்பி பர்த்டே’ என்று பதிவு செய்து பிளையிங் கிஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அடித்து ரசிகர்கள் மீண்டும் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தமிழில் நிகழ்த்திய மாயாஜாலத்தை இந்தியிலும் ஏற்படுத்திய இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஹிர்த்திக் ரோஷன் - சயீப் அலி கான் ஆகியோர் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்து, இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா'  படத்திற்கு ரசிகர்களிடம் பெரும்

செம டஃப்பா இருக்கும் போலயே…. ஸ்ரீதேவியின் இளைய மகள் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது.. மனைவியின் முத்தத்தை வர்ணித்த ரவீந்தர்!

சொர்க்கம் பூமியில் தான் இருக்கிறது என தயாரிப்பாளர் ரவீந்திரன் தனக்கு தனது மனைவி கொடுத்த முத்தம் குறித்து பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ரஜினிகாந்த் முன் சமரச பேச்சு.. மீண்டும் இணைகிறார்களா தனுஷ்-ஐஸ்வர்யா?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில் ரஜினிகாந்த் முன் சமரசம் பேசப்பட்டதாகவும் இதனை அடுத்து விரைவில் இருவரும் மீண்டும்

பிக்பாஸ் கேப்ரில்லாவுடன் காதலா? ஆஜித் சொன்ன பதிலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் ஆஜித் மற்றும் கேப்ரில்லா என்பதும் இவர்கள் இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருப்பதை