நடிகைகளுக்கு பாலியல் தொல்லை.. ஊர்வசி சொன்ன ஐடியா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடக்காமல் இருக்க இதை செய்ய வேண்டும் என நடிகை ஊர்வசி ஐடியா கொடுத்துள்ளார்.
மலையாள திரையுலகில் உள்ள நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த அனுபவங்களை கூறிய நிலையில் இது குறித்து ஹேமா கமிஷன் அறிக்கையில் வெளியானதை அடுத்து மலையாள திரையுலகமே பரபரப்பில் உள்ளது.
இந்த நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின்னர் பல நடிகைகள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க நடிகை ஊர்வசி ஒரு ஐடியாவை கொடுத்துள்ளார்.
அதன்படி பெண்கள் படப்பிடிப்பிற்கு செல்லும் போது கண்டிப்பாக துணைக்கு ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெண்கள் தனியாக வாய்ப்பு தேடிச் சென்றாலோ அல்லது படப்பிடிப்புக்கு சென்றாலோ இது போல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மலையாள சினிமா உலகில் மட்டும் இன்றி அனைத்து திரையுலகிலும், அனைத்து அலுவலகங்கள் மற்றும் துறைகளிலும் பெண்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிடமே பல சீனியர் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை கொடுத்து எல்லாம் பேசி உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com