பிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை

சமீபத்தில் பழம்பெரும் பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி அவர்கள் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. ஷபனா ஆஷ்மி விபத்தில் சிக்கியது குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தனது டுவிட்டரில் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று வேண்டிக் கொள்வதாக ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார்.

இந்த டுவிட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பிரபல நடிகை ஊர்வசி ரௌடேலா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவர் இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த நடிகை ஊர்வசி ரௌடேலாவை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். மேலும் காப்பி பேஸ்ட் செய்வதற்கு பதில் பிரதமரின் டுவிட்டை ரீடுவீட் செய்திருக்கலாமே? என்றும் நெட்டிசன்கள் நடிகையிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷபனா ஆஷ்மி குணமடைய வேண்டும் என்ற நடிகையின் நல்ல எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் அவரை கேலி செய்வதாக ஒருசிலர் நடிகை ஊர்வசி ரௌடேலாவுக்கும் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

More News

அட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

ஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..?!

பிசிசிஐ ஜனவரி 16 வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இடம்பெறவில்லை. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்!

நடிகர் சந்தானம் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படம் 'ஏ1'. இந்த படம் ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூலித்ததாக

ரஜினி மகளின் 2வது திருமணம் பெரியாரின் சீர்திருத்தமா? ஹெச்.ராஜா பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியபோது

பொதுத் தேர்வில் நேர்மையாக வெற்றி பெறுவது எப்படி? மாணவர்களுக்கு மோடி வழங்கிய அறிவுரைகள்.

2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.