ஊரூர் ஆல்காட் குப்பம் விழா 2018 குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,January 14 2018]

ஊரூர் ஆல்காட் குப்பம் விழா என்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சி வரும் 15ஆம் தேதி அதாவது நாளை சென்னை திருவள்ளுவர் நகர் சமுதாய கூடம், 1-வது குறுக்கு தெரு, திருவள்ளுவர் நகர், பெசன்ட் நகர் என்ற இடத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் தி டெம்ப்ஸ்ட் -- கிரியா சக்தி வழங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியரின் தமிழ் நகைச்சுவை நாடகம் நடைபெறவுள்ளது. சம்யுக்தா இயக்கத்தில் முத்துமூர்த்தி இசையில் நடைபெறும் இந்த நாடகத்தில் கார்த்திக், கிரண், ஜார்ஜ், கீர்த்தி, விக்ரம், ஸ்ரீவத்ஸவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த விழாவின் இன்னொரு பகுதியாக அய்யப்பதாஸர் அவர்கள் தமிழ் பக்தி பாடல்களை பாடவுள்ளார். 62 வயதான அய்யப்பதாசர் சென்னையில் பிறந்து, கடந்த 55 வருடங்களுக்கு மேலாக பாடி கொண்டிருக்கிறார். 16 ஆண்டுகளுக்கு மேல் அவர் திரு நீடாமங்கலம் V.V. சுப்ரமணியம் மற்றும் நங்கநல்லூர் V. ராமநாதன் அவர்களிடம் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவர். இவரது இசையில் T M சௌந்தரராஜன், ஜேசுதாஸ், S P பாலசுப்ரமணியம், மனோ, மற்றும் வீரமணி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள ரம்யா என்பவரிடம் 9003287689 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம்.

More News

தமிழ்ச் சமூகத்தை புண்படுத்துவேனா? வைரமுத்துவின் உருக்கமான விளக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜபாளையத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறியதாக சொல்லப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு

மெர்சல்' வசனங்களுக்கு சர்ச்சை வரும் என்று எனக்கு முன்பே தெரியும்: விஜய்

பிரபல வார இதழ் ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை தளபதி விஜய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த விருதினை வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது.

அரசியல் குறித்து கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு

அரசியல் அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் ஒரு முக்கிய அறிவிப்பை கமல் வெளியிட்டுள்ளார்.

பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் அவசியம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த ஆதார் அட்டை எண்ணை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க வேண்டும்

ஜூன் மாதம் சசிகலாவுடன் சுற்றுப்பயணம் செய்வேன்: நடராஜன் அதிர்ச்சி தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை வகித்து வருகிறார்.