அரசியல் களத்தில் குதிக்கும் 'உறியடி' இயக்குனர்

  • IndiaGlitz, [Thursday,October 05 2017]

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் அரசியல் நிலவரம் பரபரப்பான சூழ்நிலையில் இருப்பதால் திரைத்துறையினர்களும் அரசியல் குறித்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசியலில் நேரடியாக குதிக்கவும் பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றானர்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒருசில அரசியல் த்ரில்லர் படங்கள் கோலிவுட் திரையுலகில் உருவாகி வரும் நிலையில் தமிழ் திரையுலகின் வித்தியாசமான படங்களில் ஒன்றாக கருதப்பட்ட 'உறியடி' இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு அரசியல் த்ரில்லர் படம் என்ற செய்தி வெளியாகியுள்ளது

மேலும் இந்த படத்தை இயக்குனர் விஜயகுமார் இயக்குவது மட்டுமின்றி முக்கிய வேடத்தில் நடிக்கவும் உள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'மெர்சல்' முதல் காட்சிக்கு 'விவேகம்' பட நடிகருக்கு அழைப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கு செல்ல தயார் நிலையில் உள்ளது

கார்த்திக்-கவுதம் கார்த்திக் பட நாயகி அறிவிப்பு

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹரஹர மகாதேவகி' திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அபாரமான வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் திரு இயக்கவுள்ளதாகவும்

உதயநிதி ஸ்டாலினை நிமிர வைத்த மோகன்லால்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும் திரைப்படம் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.

புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவு ஏன்? விஷால் விளக்கம்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் புதிய கேளிக்கை வரியான 10% வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை

தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மீனாட்சி அம்மன் கோவில்: தமிழனின் கெத்து

தாஜ்மஹால் மற்றும் உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.