உரியடி விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனராகும் உதவி இயக்குநர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜயகுமார் நடித்த ’உரியடி’ மற்றும் ’உறியடி 2’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்த அப்பாஸ் என்பவர் தற்போது இயக்குனர் ஆகி உள்ளார் என்பதும் இந்த படத்தில் விஜயகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
கடந்த 1991 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் இந்த படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான கெட்டப்புகள் இருப்பதாகவும், பள்ளி சிறுவன், கல்லூரி மாணவர் முதல் இளைஞர் வரையிலான காலகட்டத்திற்காக அவருக்கு பல கெட்டப்புகள் இந்த படத்தில் உண்டு என்றும், இந்த படத்தின் கதைக்கு விஜயகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என்பதை உறுதி செய்து அவரை தான் தேர்வு செய்ததாகவும் இயக்குனர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்
இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை தயாரிக்கும் ரியல் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Excited to announce REEL GOOD FILM's debut production starring #Uriyadi @Vijay_B_Kumar in a youth action-drama. The film ll be directed by @Abbas_A_Rahmath (Asst. director Uriyadi 1&2). We hv begun pre-production work & are in the process of finalizing rest of the cast and crew. pic.twitter.com/Ia8dCMKknV
— REEL GOOD FILMS (@reel_good_films) December 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments