உரியடி விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனராகும் உதவி இயக்குநர்!

  • IndiaGlitz, [Friday,December 11 2020]

விஜயகுமார் நடித்த ’உரியடி’ மற்றும் ’உறியடி 2’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்த அப்பாஸ் என்பவர் தற்போது இயக்குனர் ஆகி உள்ளார் என்பதும் இந்த படத்தில் விஜயகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 1991 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் நடக்கும் இந்த படத்தில் விஜயகுமாருக்கு வித்தியாசமான கெட்டப்புகள் இருப்பதாகவும், பள்ளி சிறுவன், கல்லூரி மாணவர் முதல் இளைஞர் வரையிலான காலகட்டத்திற்காக அவருக்கு பல கெட்டப்புகள் இந்த படத்தில் உண்டு என்றும், இந்த படத்தின் கதைக்கு விஜயகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என்பதை உறுதி செய்து அவரை தான் தேர்வு செய்ததாகவும் இயக்குனர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை தயாரிக்கும் ரியல் குட் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

More News

கரெக்ட் பாயிண்ட் சொன்னா போயிடுவாரு, இதுதான் ரியோ: வறுத்தெடுத்த அனிதா!

பிக்பாஸ் வீட்டில் நேற்று மோசமான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்ட அனிதா சிறைக்குச் சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் சிறையில் இருக்கும்

நான் மோசமான போட்டியாளரா? புலம்பி கொண்டே சிறை செல்லும் அனிதா!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் புதிய மனிதா என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்ட நிலையில் இதில் சிறப்பாக செயல்பட்டவர்கள், ஒட்டுமொத்தமாக

ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரிலும் நடிக்கும் இளம் நடிகர்!

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான கௌதம் கார்த்திக் ஹீரோ வில்லன் என இரண்டு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

'வலிமை' அப்டேட் எப்போது? அஜித் மேனேஜர் அறிக்கை!

தல அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த புத்திசாலித்தனத்தை டாஸ்க்குல காட்டுங்க: ரம்யாவை கண்டித்த பிக்பாஸ்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் தினமும் மூன்று புரமோ வீடியோக்கள் விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்பதும் அந்த புரமோ வீடியோக்கள் நிகழ்ச்சியை