close
Choose your channels

'கேப்டன் மில்லர்' படத்தில் 'உறியடி' விஜயகுமார் நடிப்பது உண்மையா?

Saturday, February 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் ’உறியடி’ விஜயகுமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று கூறப்படும் நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக இந்த படத்தில் ’உறியடி’ விஜயகுமார் இணைந்துள்ளதாகவும் அவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து ’கேப்டன் மில்லர்’ குழுவினர் விளக்கம் அளித்த போது ’உறியடி’ விஜயகுமார் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் இது வழக்கம் போல் சமூக வலைதளங்களை பரவி வரும் வதந்திகளில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ’உறியடி’ விஜயகுமார் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ’உறியடி’ விஜயகுமார் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment