'கேப்டன் மில்லர்' படத்தில் 'உறியடி' விஜயகுமார் நடிப்பது உண்மையா?

  • IndiaGlitz, [Saturday,February 25 2023]

தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் ’உறியடி’ விஜயகுமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று கூறப்படும் நிலையில் திடீரென கடந்த சில நாட்களாக இந்த படத்தில் ’உறியடி’ விஜயகுமார் இணைந்துள்ளதாகவும் அவருக்கு இந்த படத்தில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து ’கேப்டன் மில்லர்’ குழுவினர் விளக்கம் அளித்த போது ’உறியடி’ விஜயகுமார் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் இது வழக்கம் போல் சமூக வலைதளங்களை பரவி வரும் வதந்திகளில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ’உறியடி’ விஜயகுமார் ’கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ’உறியடி’ விஜயகுமார் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில் துருவா சர்ஜாவின் மாஸ் நடிப்பில் மார்டின் டீசர் !!!

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா தயாரிப்பில், ஆக்சன் கிங் அர்ஜுன் கதையில், இயக்குநர் AP அர்ஜுன் இயக்கத்தில், 'ஆக்சன் பிரின்ஸ்' துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான

பி வாசு குடும்பத்தில் நிகழ்ந்த சோக சம்பவம்.. 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு ஒத்திவைக்கப்படுகிறதா?

பிரபல இயக்குனர் பி வாசு இல்லத்தில் நடந்த சோக நிகழ்வு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நடக்காது என்று கூறப்படுகிறது. 

ஓடி ஓடி கோப்பைகளை குவிக்கும் ரஜினி பேரன்கள்.. மகிழ்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன்களும், ஐஸ்வர்யாவின் மகன்களுமான லிங்கா மற்றும் யாத்ரா ஆகிய இருவரும் பள்ளி அளவில் நடந்த ஓட்ட போட்டியில் ஓடி கோப்பைகளை குவித்துள்ள புகைப்படங்களை

பிறந்த நாளில் கெளதம் மேனனின் மாஸ் போஸ்டர்.. 'பத்து தல' படக்குழு ரிலீஸ்..!

தமிழ் திரை உலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு..!

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் வசூலித்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.