நம்ம குடும்பத்துக்கு அரசியல் ஒத்து வராதுடா.. 'உறியடி' விஜயகுமாரின் 'எலக்சன்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

‘உறியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவாகிய ‘எலக்சன்’ என்ற திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘உறியடி’ விஜயகுமார் தான் உண்டு தனது குடும்பம் உண்டு என்று நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது வாழ்வில் அரசியல் குறுக்கிடுகிறது. ஒரு கட்சியின் இரண்டு பிரிவினருக்கு இடையே நடக்கும் உள்கட்சி பிரச்சினையில் விஜயகுமாரை சில அரசியல்வாதிகள் பயன்படுத்த, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்று இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக சாதாரண தொண்டனாக கட்சியில் சேரும் விஜயகுமார் திடீரென தலைவர் பதவிக்கு போட்டியிடுவது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைவர் பதவியை அவர் பிடித்தாரா? என்பது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘உறியடி’ விஜயகுமார் ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள இந்த படத்தில் ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், திலீபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தை தமிழ் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிய இந்த படம் ‘உறியடி’ விஜயகுமாருக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.