சூர்யாவின் அடுத்த பட பாடலின் புரமோ வீடியோ வெளியீடு

  • IndiaGlitz, [Saturday,March 02 2019]

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' என்ற திரைப்படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் இவ்வருடம் சூர்யாவின் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று 'உறியடி 2'. முதல் பாகத்தை இயக்கி நடித்த விஜய்குமார் இந்த படத்தையும் நடித்து இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 'வா வா பெண்ணே' என்று தொடங்கும் இந்த பாடலை கோவிந்த் வசந்தா இசையமைக்க விஜய்குமார் மற்றும் நாகராஜி எழுத, சித்ஸ்ரீராம் மற்றும் பிரியங்கா பாடியுள்ளனர்.

விஜய்குமார், சுதாகர், விஸ்மாயா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு பிரவீன்குமார் ஒளிப்பதிவும், லினு படத்தொகுப்பு பணியும் செய்து வ்ருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.