'உறியடி 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

  • IndiaGlitz, [Thursday,March 28 2019]

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் விஜயகுமார் நடித்து இயக்கி வந்த 'உறியடி 2' திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.

விஜயகுமார், சுதாகர், விஸ்மியா உள்பட பலர் நடித்துள்ள 'உறியடி 2' திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரவீண் குமார் ஒளிப்பதிவில் லினு படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் முதல் பாகம் போலவே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.