close
Choose your channels

விதவிதமா போட்டோஷூட் எடுப்பாங்களே.. என்ன ஆச்சு இந்த நடிகையின் முகத்திற்கு? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Monday, June 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட் திரை உலகின் கிளாமர் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக வித்தியாசமான கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் திடீரென அவரது முகம் வீங்கி இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகில், பாலிவுட் சின்னத்திரையிலும் பிரபலமானவர் நடிகை உர்பி ஜாவித். இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் ஐந்து மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் வித விதமான போட்டோஷூட் எடுத்து பதிவு செய்வார். சில போட்டோஷூட் மிகவும் பைத்தியக்காரதனமாகவும், கிறுக்குத்தனமாகவும் இருப்பதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் அவர் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென அவர் முகமெல்லாம் வீங்கி இருக்கும் சில புகைப்படங்களை பதிவு செய்து தனக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் தனது முகம் வீங்கி இருப்பதாகவும், தற்போது மிகுந்த அசௌகரியத்தில் இருப்பதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். சில நேரம் எனக்கு மோசமான அலர்ஜி காரணமாக முகம் வீங்கி விடுகிறது என்றும் இந்த மோசமான நாட்களை நான் கடந்து செல்கிறேன் என்றும் 18 வயதில் இருந்தே நான் வழக்கமாக பயன்படுத்தும் மேக்கப் சாதனங்களை தான் பயன்படுத்தி வருகிறேன் வேறு எதையும் செய்யவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ’என் முகம் வீங்கி இருப்பதை நீங்கள் பார்த்து எனக்கு யாரும் அறிவுரை எதுவும் கூற வேண்டாம் என்றும் ஜஸ்ட் அனுதாபப்பட்டு மேலே செல்லுங்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment