சர்ச்சை நாயகி உர்ஃபியின் புது அவதாரம்… மேலாடையின்றி மறைத்த வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பேஷன் என்ற பெயரில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டுவரும் நடிகை உர்ஃபி ஜாவேத் தற்போது புது போட்டோ ஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல மாடல், பிக்பாஸ் ஓடிடி பிரபலம் மற்றும் தொலைக்காட்சி நடிகை என்று பன்முக அடையாளங்களைக் கொண்டவர் பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் பேஷன் உலகில் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். காரணம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இவர் அணிந்துவரும் உடைகள் கவர்ச்சியாகவும் அதே நேரத்தில் புது விதமாகவும் இருக்கின்றன. மேலும் பொதுவெளியில் கூட இதேபோன்று கவர்ச்சியாக உடையணிந்து வருவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் பொதுமக்கள் மத்தியில் மோசமாக விமர்சிக்கப்படவும் செய்கிறார்.
இந்நிலையில் நடிகை உர்ஃபியை பெரும்பாலான நபர்கள் சர்ச்சை நாயகி என்றே விமர்சிக்கின்றனர். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் இவரைப் பின்பற்றும் சில இளைஞகள் இவரை பேஷன் உலகின் நாயகி என்றும் கொண்டாடியும் வருகின்றனர். இப்படி போற்றலுக்கும் தூற்றலுக்கும் மத்தியில் வாழ்ந்துவரும் உர்ஃபி தன்மீதான விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து புதுப்புது கவர்ச்சி ஆடைகளை அணிந்து கொள்வதையும் பொதுவெளியில் நடமாடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் டைம்லைனில் எப்படியேனும் இடம்பிடிக்கவும் செய்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற Lakme fashion week நிகழ்ச்சியில் நடிகை உர்ஃபி கலந்து கொண்டார். அப்போது வெள்ளைநிற உடையணிந்திருந்த இவர் மேலாடைக்குப் பதிலாக வெறுமனே ஒரு ரிப்பனை மட்டும் அணிந்து தனது நீளமான ப்ளூ நிற முடியை வைத்து மறைத்திருந்தார். இந்தப் புகைப்படம் பொதுவெளியில் பரவலாக விமர்சிக்கப்பட்ட நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையே அணியாமல் சட்டை மாட்டி வைக்கும் ஹேங்கர் மாதிரி இருக்கும் ஒரு பொருளை வைத்து தனது மேல்பாகத்தை மறைத்துள்ளார். இதைப் பார்த்த இளைஞர்கள் பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி உர்ஃபியை விமர்சித்து வருகின்றனர்.
#urfijaved Spotted At New Song Launch Event In Mumbai pic.twitter.com/QpW5lyUm9t
— Yatin Tambe (@YatinTambe2) March 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout