ஒரு நூல் மட்டும்தான் இருக்கு… சர்ச்சை நாயகி உர்ஃபியின் விசித்திரமான ஆடை புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசித்திர ஆடை மற்றும் சர்ச்சைகளுக்குப் பெயர்போன உர்ஃபி ஜாவேத் ஹோலியை சிறப்பிக்கும் விதமாக விசித்திரமான ஆடையணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நடிகையான உர்ஃபி ஜாவேத் அவ்வபோது கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை வெளியிடுவார். பொதுவெளியிலும் இதேபோன்று உடையணிந்து சர்ச்சையை ஏற்படுத்துவார். சமீபத்தில் இவர் பொதுவெளியில் அணிந்திருந்த ஆடை மிகவும் மோசமாக இருந்தது என வழக்கு பதிவு செய்யப்பட்டு அதுகுறித்து உர்ஃபி வாக்குமூலம் அளித்த தகவலும் வெளிவந்தது. இந்நிலையில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிவரும் உர்ஃபி விசித்திரமான ஆடையொன்றை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அதில் ஒரு மேலாடை மற்றும் ஷார்ட்ஸ் போன்ற கீழாடை அணிந்திருக்கும் உஃர்பி முழங்காலுக்கு கீழேயும் ஒரு உடையை அணிந்திருக்கிறார். ஆனால் ஷார்ட்சில் இருந்து கீழாடையை இணைப்பதற்கு வெறுமனே ஒரு நூல் மட்டுமே இருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தாறுமாறான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
வண்ணங்களை வரவேற்கும் விதமாகவும் பனிக்காலம் முடிந்து கோடை காலத்தை எதிர்க்கொள்ளும் விதமாகவும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையின் போது உர்ஃபி வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் கலவையான விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments