பைத்தியக்காரத் தனத்தின் உச்சம்…. உர்ஃபி ஜாவேத்தின் விருது ஆடைக்கு குவியும் எதிர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றிரவு மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட உர்ஃபி ஜாவேத் பேஸ்ட்டால் செய்யப்பட்ட ஒரு அட்டையை தனது மேலாடையாகப் பயன்படுத்திய நிலையில் அவரது ஆடைக்கு கடுமையான எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஒரு தரப்பினர் அவரது தைரியத்தைப் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவேத் பின்னர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சியிலும் அவர் அணிந்திருந்த ஆடை விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில் பேஷன் விஷயங்களில் ஆர்வம் காட்டிவந்த உர்ஃபி தொடர்ந்து பொது வெளியிலும், மேடை நிக்ழ்ச்சிகளிலும் படு கவர்ச்சியாக உடை அணிவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனால் பாஜக கட்சி பெண் பிரமுகர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்துவரும் உர்ஃபி தொடர்ந்து விதவிதமான கவர்ச்சிப் புகைப்படங்களை தனது சமூகவலைத் தளத்தில் பதிவிட்டு வந்த நிலையில் அவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ந்து ஆடை விஷயத்திற்காக கடுமையான எதிர்ப்புகளை சந்தித்துவரும் உர்ஃபி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உடலில் ஆடையில்லாமல் வெறும் பேஸ்டை கொட்டிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் விரைவில் சுவாரசியமான ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றும் பதிவிட்டு இருந்தார்.
ஆனால் தற்போது Ajio ஆடை நிறுவனம் தொகுத்து வழங்கிய விருது நிகழ்ச்சி ஒன்றில் அவர் நேற்றிரவு கலந்து கொண்டுள்ளார். கிராசியா மில்லினியல் எனும் பெயரிலான இந்த விழா தாஜ்லேண்ட் எண்டில் நடைபெற்ற நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாலிவுட் நடிகை திஷா பதானி, தியா மிர்சா, சோஃபி சௌத்ரி, அதிதிராவ் ஹைதாரி, நடிகர் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த விழாவில் உர்ஃபி ஜாவேத்தும் கலந்து கொண்டார்.
இதில் மெட்டல் போன்று வடிவமைக்கப்பட்டு இருந்த கோல்டன் அட்டையை உர்ஃபி தனது மேலாடையாக அணிந்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத் தளத்தில் படு வைரலான நிலையில் பைத்தியக்காரத் தனத்தின் உச்சம், இதெல்லாம் பேஷனா? என்று பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு சிலர் உர்ஃபியின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும், பேஷன் ஐகான் என்று அவரைக் கொண்டாடியும் வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout