வரும் வாரங்களில் வரவுள்ள எதிர்பார்ப்பு மிகுந்த படங்கள். ஒரு பார்வை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த தீபாவளி தினத்தில் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் அஜீத்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி இரண்டு வாரங்கள் பெருவாரியான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது. இரண்டுமே வெற்றி படங்களாக அமைந்த நிலையில் நேற்று முன் தினம் 'இஞ்சி இடுப்பழகி', '144', 'உப்புக்கருவாடு' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வரும் வாரங்களில் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதால் கோலிவுட்டில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் என்னென்ன முக்கிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை தற்போது பார்ப்போம்.
வரும் டிசம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள்:
1. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொன்ராம் இயக்கிய 'ரஜினிமுருகன்'
2. அதர்வா,ஸ்ரீதிவ்யா நடிப்பில் ரவி அரசு இயக்கிய 'ஈட்டி'
3. பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன் நடிப்பில் சக்திவேல் பெரியசாமி இயக்கிய 'உறுமீன்'
டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள்
1. தனுஷ், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய 'தங்கமகன்'
2. உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடிப்பில் திருக்குமரன் இயக்கிய 'கெத்து'
கிறிஸ்துமஸ் திருநாளில் ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள்
1. சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2'
2. சித்தார்த், சனாத் ரெட்டி நடிப்பில் தீரஜ் வைத்தி இயக்கிய 'ஜில் ஜங் ஜக்'
3. விமல், நந்திதா ஸ்வேதா நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கிய 'அஞ்சல'
4. தினேஷ், மியா ஜார்ஜ் நடிப்பில் நெல்சன் இயக்கிய 'ஒருநாள் கூத்து'
பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்:
1.சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை 2'
2.விஷால், காதரீன் தெரசா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய 'கதகளி'
3.ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கிய 'மிருதன்'
4. சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை'
மேற்கண்ட முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்களின் வரும் வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் வரும் கோடை விடுமுறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' மற்றும் சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கிய '24' ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout