கரு முட்டையை பாதுகாத்தோம்… 10 வருடம் கழித்து கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசானா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அதுகுறித்த புதுத் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இடம்வகித்து வரும் நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா திருமணத்திற்குப் பிறகு 10 வருடம் கழித்து கர்ப்பம் ஆகியிருக்கிறார். இந்தத் தம்பதிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தினர். அதேபோல நீண்ட இடைவெளி விட்டு கர்ப்பம் ஆனது குறித்து பேசிய அவர் சமூக அழுத்ததிற்காக இல்லாமல் சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் தாயாகி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது 8 மாதக் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் உபாசனா நேற்று தனது பேபி பம்-உடன் முதல் முறையாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறேன். எல்லா சரியான காரணங்களுக்காகவும் தாய்மையை தழுவுவதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய உபாசனா நாங்கள் திருமணத்தின் துவக்கத்திலேயே கருமுட்டையை பாதுகாப்பதற்கு முடிவு செய்தோம். பல்வேறு காரணங்களுக்காக எங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். தற்போது ஒரு நிலையான இடத்தில் இருக்கிறோம். நாங்கள் உருவாக்கும் வருமானத்தைக் கொண்டு குழந்தையைப் பராமரிக்க இயலும் என்று உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொழிலதிபராக இருந்துவரும் உபாசானா காமினேனி கூறியுள்ள இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com