புகார் அளிக்க பெண் முன் சுய இன்பம்: வைரலான வீடியோவால் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

சொத்து பிரச்சனை தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளிக்க வந்த பெண் முன், சுய இன்பம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பின்னர் காவல் துறையின் மரியாதை படு பாதாளத்துக்கு சென்று உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு கேவலமான சம்பவம் காவல்துறையில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா என்ற மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பெண் ஒருவர் சொத்து சம்பந்தமாக புகார் அளிக்க வந்தார். ஆனால் அந்தப் பெண்ணின் புகாரை வாங்கிக் கொண்டு அவர் முன் அந்த காவல்துறை அதிகாரி சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்து அந்தப் பெண் எரிச்சலடைந்து புகார் குறித்து எதுவும் பேசாமல் திரும்பி விட்டார்.

இதேபோல் இரண்டு மூன்று முறை அவர் காவல்துறையில் சொத்து பிரச்சனை காரணமாக புகார் அளிக்க வந்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் சுய இன்பம் செய்வது போலவே அந்த அதிகாரி செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீண்டும் ஒருநாள் புகார் கொடுக்க சென்ற போது காவல்துறை அதிகாரி சுய இன்பம் செய்வதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து கொண்டார். அந்த வீடியோ ஆதாரத்தை நேராக மாவட்ட எஸ்பி அவர்களிடம் கொடுத்து இதுகுறித்து அந்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

2வது மாடியில் கேட்பாரற்று 3 நாட்கள் கிடந்த தாயின் பிணம்: 4வது மாடியில் குடியிருந்த மகன் மீது வழக்கு

80 வயது தாயின் பிணம் மூன்று நாட்கள் கேட்பாரற்று இரண்டாவது மாடியில் இருந்த நிலையில், அதே அபார்ட்மெண்டில் நான்காவது மாடியில் குடியிருந்த அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால்

'அர்ஜூன் ரெட்டி' பட நடிகை கொடுத்த பாலியல் புகார்: 'போக்கிரி' பட ஒளிப்பதிவாளர் கைது!

https://tamil.asianetnews.com/cinema/famous-camera-man-shyam-k-naidu-bail-cancel-after-sai-sudha-cheating-complaint-qcsd7r

இனிமே தா ஆட்டமே இருக்கு… WHO வின் புது எச்சரிக்கை!!!

கொரோனா வைரஸ் ஏற்டுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது

இந்த விளம்பரத்தை எல்லாம் இந்திய மக்கள் எப்படி ஏத்துக்கிறாங்க??? கடுப்பான டேரன் சமி!!!

அமெரிக்காவில் கடந்த மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற இளைஞர் நிறவெறி காரணமாக உயிரிழந்தார்.

சாத்தான்குளம் சம்பவம் அரசாங்கத்தின் தவறல்ல: பாரதிராஜா அறிக்கை

சாத்தான்குளம் தந்தை-மகன் காவல்துறையினரால் அடித்தே கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஜினி, கமல் உள்பட ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் கொடுத்துள்ள நிலையில்