வளர்த்தவரின் தாயாரை கடித்து குதறிய நாய்: நாய் வளர்த்தவர் எடுத்த அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Friday,July 15 2022]
உத்தரபிரதேச மாநில ஜிம் பயிற்சியாளர் ஒருவர் வளர்த்த நாய் அவருடைய தாயாரை கடித்து குதறியதையடுத்து அவரது தாயார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவர் எடுத்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ என்ற பகுதியில் ஜிம் பயிற்சியாளரான அமித் என்பவர் தனது வீட்டில் செல்லமாக பிட்புல் என்ற வகை நாயை வளர்த்தார். அவரும் அவருடைய தாயார் மட்டுமே அந்த வீட்டில் இருந்த நிலையில் அந்த நாய் இருவரிடமும் மிகவும் பாசத்துடன் இருந்தது.
இந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக அந்த நாயை அவர் வளர்ந்து வந்த நிலையில் நேற்று திடீரென நேற்று அமித் தாயார் சுசிலா திரிபாதியை கடித்து குதறியது. வீட்டின் உள்பக்கம் தாள் போட்டு இருந்ததால் அவர் கதறியும் அக்கம்பக்கத்தினர் அவருக்கு உதவி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் அமித் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது தாயார் நாய் கடித்து படுகாயம் அடைந்ததை பார்த்து கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக தனது தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுசிலாவின் உடம்பில் கழுத்து முதல் வயிறு வரை 12 இடங்களில் நாய் கடித்த காயம் இருந்ததாகவும் நாய் கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் தான் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கூறிய போது வீட்டின் உள்ளே நாய் அதிகமாக குரைக்கும் சத்தம் கேட்டது என்றும் சுசீலா கதறல் சத்தம் கேட்டபோதிலும் வீட்டின் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் எங்களால் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றும் உடனடியாக அவரது மகனுக்கு தகவல் அளித்தோம் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் தான் வளர்த்த நாய் தன்னுடைய தாயாரை கடித்து கொலை செய்த நிலையில் அவர் நாய் மீது வெறுப்பு காட்டவில்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த நாயை அவர் விலங்குகள் ஆர்வலரிடம் ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் வளர்த்த நாய் பிட்புல் நாய் வகையை சேர்ந்தது. அமெரிக்கன் பிட்புல் நாய் மிகவும் விலை உயர்ந்தது. மனிதர்களை மிகவும் அரிதாகவே தாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து நாய் வளர்க்கும் நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.