மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆண் நண்பர்: ஆணுறுப்பை வெட்டிய தாய்

  • IndiaGlitz, [Monday,August 29 2022]

லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த ஆண் நண்பர் ஒருவர் தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து அந்த நண்பரின் ஆணுறுப்பை தாய் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்பூர் என்ற பகுதியில் 36 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் 32 வயது ஆண் ஒருவருடன் லிவிங்டுகெதர் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் வேலை சம்பந்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில் அவருடைய ஆண் நண்பர் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்செயலாக வீடு திரும்பிய பெண் தனது மகளிடம் ஆண் நண்பர் தவறாக நடக்க முயற்சித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த பெண் சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து ஆண் நண்பரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். இதனால் அந்த ஆண் நண்பர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து அந்த பெண் கூறுகையில் ’என் மகளிடம் தவறாக நடக்க முயன்ற அந்த நபருடன் எனக்கு மோதல் ஏற்பட்டது. நான் உடனே கத்தியை எடுத்து அவருடைய ஆணுறுப்பை வெட்டி விட்டேன். இதுபோன்ற நபர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கவே இந்த காரியத்தை செய்தேன். இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் இதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

More News

கடுமையாக விமர்சித்த திரையரங்கு உரிமையாளரை சந்தித்த விஜய் தேவரகொண்டா: என்ன செய்தார் தெரியுமா?

 சமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' என்ற திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தேவரகொண்டாவின் திமிறுதான்

குஷ்புவை அடுத்து கவர்ச்சி நடிகைக்கு கட்டப்பட்ட கோவில்: வெறித்தனமான ரசிகர்!

 தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை குஷ்புவுக்கு மதுரையில் கோவில் கட்டப்பட்ட நிலையில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு அவரது வெறித்தனமான ரசிகர் ஒருவர் கோவில் கட்டி

ஜெயம் ரவியின் அடுத்த படம், நாயகி இயக்குனர் அறிவிப்பு: வைரலாகும் மோஷன் போஸ்டர்!

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில், நாயகி மற்றும் இயக்குனர்

இயக்குனராகும் 'திருச்சிற்றம்பலம்' பட நடிகை: முதல் பட ஹீரோ யார்?

 தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விரைவில் இயக்குனராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.100 கோடியில் இருந்து ரூ.20 கோடி: திடீரென சம்பளத்தை குறைத்த ஷங்கர் பட நடிகர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்த நடிகர் திடீரென தனது சம்பளத்தை 100 கோடியில் இருந்து 80 கோடி ரூபாய் குறைத்து 20 கோடி ரூபாய் என மாற்றியிருப்பது திரையுலக வட்டாரத்தில்