மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த இளைஞர்… பரபரப்பு சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணைத் தேடித்தருமாறு உத்திரப்பிரதேச மாநில இளைஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதும் கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தான் 2 அடி உயரத்தில் இருப்பதால் அனைத்துப் பெண்களும் வெறுத்து ஒதுக்குவதாகவும் இதனால் பொருத்தமான பெண்ணை நீங்களே பொதுச்சேவை அடிப்படையில் தேடித்தர வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்து இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் கைரானா மாவட்டத்தில் வசிப்பவர் அசின் மன்சூரி. இவர் பிறவி கோளாறு காரணமாக 2 அடிக்கு மேல் வளராமலே இருந்து விட்டார். அதோடு இவர் 21 வயதை எட்டியவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டி இவரது பெற்றோர் பெண்ணை தேடியுள்ளனர். ஆனால் உயரம் குறைவாக இருப்பதால் இவரை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை. இப்படியே கடந்த 5 வருடங்களாக பெண்தேடும் படலம் தொடர்ந்து இருக்கிறது. இதனால் வெறுத்துப்போன அசின் நான் நல்ல வேலை செய்கிறேன். திருமணம் செய்து வாழ்வதற்கு ஏற்ற வருமானத்தை பெற்று வருகிறேன். ஆனால் என்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என ஏங்கி இருக்கிறார்.
தன்னுடைய குறையைத் தீர்த்து வைக்குமாறு இவர் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்விற்கும் இந்நாள் முதல்வர் யோகி ஆதியநாத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எந்த கடித்திற்கு பதில் கிடைக்காத நிலையில் இவராக முடிவெடுத்து ஷம்லி கோட்வாலா பகுதியில் உள்ள பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இவர் அளித்துள்ள புகார் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று தற்போது அசினுக்கு ஏற்ற வரன்கள் குவிந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மிக விரைவில் அசினுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைத்து விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments