மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த இளைஞர்… பரபரப்பு சம்பவம்!

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணைத் தேடித்தருமாறு உத்திரப்பிரதேச மாநில இளைஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதும் கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தான் 2 அடி உயரத்தில் இருப்பதால் அனைத்துப் பெண்களும் வெறுத்து ஒதுக்குவதாகவும் இதனால் பொருத்தமான பெண்ணை நீங்களே பொதுச்சேவை அடிப்படையில் தேடித்தர வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்து இருப்பது தற்போது சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்று இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் கைரானா மாவட்டத்தில் வசிப்பவர் அசின் மன்சூரி. இவர் பிறவி கோளாறு காரணமாக 2 அடிக்கு மேல் வளராமலே இருந்து விட்டார். அதோடு இவர் 21 வயதை எட்டியவுடன் திருமணம் செய்து வைக்க வேண்டி இவரது பெற்றோர் பெண்ணை தேடியுள்ளனர். ஆனால் உயரம் குறைவாக இருப்பதால் இவரை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை. இப்படியே கடந்த 5 வருடங்களாக பெண்தேடும் படலம் தொடர்ந்து இருக்கிறது. இதனால் வெறுத்துப்போன அசின் நான் நல்ல வேலை செய்கிறேன். திருமணம் செய்து வாழ்வதற்கு ஏற்ற வருமானத்தை பெற்று வருகிறேன். ஆனால் என்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையே என ஏங்கி இருக்கிறார்.

தன்னுடைய குறையைத் தீர்த்து வைக்குமாறு இவர் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்விற்கும் இந்நாள் முதல்வர் யோகி ஆதியநாத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் எந்த கடித்திற்கு பதில் கிடைக்காத நிலையில் இவராக முடிவெடுத்து ஷம்லி கோட்வாலா பகுதியில் உள்ள பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இவர் அளித்துள்ள புகார் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று தற்போது அசினுக்கு ஏற்ற வரன்கள் குவிந்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் மிக விரைவில் அசினுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை கிடைத்து விடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிகினி உடையுடன் ஊஞ்சல் ஆடும் ராய்லட்சுமி… வைரல் புகைப்படம்!

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “கற்ககசடற” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ராய்லட்சுமி.

அண்டை மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இதுதான் என் முகவரி, தைரியம் இருந்தால் ரெய்டு நடத்துங்கள்: உதயநிதி சவால்

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று காலை முதல் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை உள்பட பலரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்

அண்ணன் ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள்: விஜயகாந்த் டுவிட்

நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தார்.

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷ் 

பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக, பாவாடை தாவணியில் ஸ்டில் ஒன்றை பதிவு செய்து கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது