மனைவி சித்தியான சோகக்கதை… ஆத்திரத்தில் காவல் துறையை நாடிய இளைஞர்!

  • IndiaGlitz, [Monday,July 05 2021]

உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் எனும் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தனது தந்தையைக் காணாமல் பல ஆண்டுகளாகத் தேடியுள்ளார். பின்னர் அவரைக் கண்டுபிடிப்பதற்காக பஞ்சாயத்து ராஜ் அலுவலகத்தில் ஆர்டிஐ பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த இளைஞரின் தந்தை குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது.

கூடவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் தன்னுடைய மனைவியைத்தான் அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அந்த ஊரில் உள்ள பஞ்சாயத்து தலைவரை அணுகிய இளைஞர், நியாயத்தைக் கேட்டு இருக்கிறார். ஆனால் அந்த பஞ்சாயத்தில் தனக்கு நியாயம் கிடைக்காத இளைஞர் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரை அடுத்து தந்தை, மகன் இருவரையும் நேரில் அழைத்த போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். அதில் மைனர் வயதாக இருக்கும்போதே அந்த பெண்ணுடன் இளைஞர் வாழ்ந்தார் என்றும் 6 மாதம் கழித்த பின்பு இருவரும் பிரிந்து விட்டனர் என்பதும் தெரியவந்தது. இந்தத் திருமணப் பந்தத்திற்கு எந்தவிதமாக ஆதாரமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் 18 வயதான பிறகு, இளைஞனுடன் வாழ்ந்த அந்தப் பெண் முறைப்படி அவரது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த விஷயத்தைக் கேட்ட போலீசார் தந்தை, மகன் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். மேலும் தந்தையுடனே அந்த இளம்பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவை மிரட்டுவது, பாஜக-வின் கோழைத்தனம்.....! சிபிஎம் பிரமுகர் பதிலடி....!

நியாமான கருத்துக்களை கூறி வரும் நடிகர் சூர்யாவை மிரட்டுவது பாஜகவின் கோழைத்தனம் என, சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஷங்கர் படத்தில் நடித்தவர் இப்போது அவரது படத்திற்கு இசையமைப்பாளரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் நடித்தவர் தற்போது அவரது படத்திற்கு இசை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

நீட் தேர்வு குறித்து பொது விவாதத்திற்கு தயாரா? சூர்யாவுக்கு பாஜக அழைப்பு!

நீட் தேர்வு குறித்து பொது வெளியில் பொது விவாதம் நடத்த நடிகர் சூர்யா தயாரா? என பாஜக பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாமி வந்தவரிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ

https://tamil.news18.com/news/entertainment/cinema-ajith-fans-asks-valimai-update-to-priest-mur-496331.html

சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிக்பாஸ் நடிகை: வைரல் புகைப்படம்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று சைக்கிளிங் சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவருடன் நடிகையும் பிக்பாஸ்