உத்திர பிரதேசத்தில் நடனத்தை நிறுத்தியதால் பெண் மீது துப்பாக்கிச் சூடு..! வீடியோ.
- IndiaGlitz, [Friday,December 06 2019]
உத்திரபிரதேசம் சித்ரகூட் மாவட்டத்தில் நடனம் ஆடிய பெண்ணின் முகத்தில் ஒருவர் சுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரகூட் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்கள் சிறிது நேரம் ஆடாமல் நின்றனர். அப்போது, பின்னால் இருந்து ஒருவர் தொடர்ந்து ஆடுங்கள் என்கிறார். அவர், குடித்திருப்பது தெரிகிறது. அந்தப் பெண் எதிர்பாராத நேரத்தில் பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுடுகிறார். பெண்ணின் தாடையில் குண்டு பாய்ந்தநிலையில், பெண் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அவருடன் சேர்ந்து ஆடிய பெண் ஓடிச் சென்று உதவ முயற்சி செய்கிறார். திருமண நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்றுள்ளது. கிராமத் தலைவரின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்றுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயமாகும்.
UP woman shot in the face because she ‘stopped dancing’ at wedding in UP’s Chitrakoot. You can hear men in the video saying ‘Goli chal jayegi’ and then ‘goli chala hi do’. She’s critical. pic.twitter.com/cIUzgFxqlo
— Shiv Aroor (@ShivAroor) December 6, 2019