புரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி!

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தில் நடிகர் சூரி 50 புரோட்டா சாப்பிடுவதாக பந்தயம் கட்டும் ஒரு காமெடி காட்சி இடம் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதே பாணியில் 50 முட்டைகள் சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய 42 வயது நபர் ஒருவர் 41வது முட்டை சாப்பிடும் போதே பரிதாபமாக பலியானார்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுபாஷ். இவர் தன்னுடைய நண்பருடன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது இருவரும் முட்டை சாப்பிடும் போது அவர்களுக்குள் திடீரென விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது உன்னால் 50 முட்டை சாப்பிட முடியுமா? என்று சுபாஷிடம் அவரது நண்பர் சவால் விட்டார். இந்த சவாலை ஏற்றுக் கொண்ட சுபாஷ், 50 சாப்பிட்டால் 2000 ரூபாய் தருவாயா? என்று கேட்டதற்கு அதற்கு அவருடைய நண்பரும் ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து 50 மூட்டை தயாரானது. ஒவ்வொரு முட்டையாக சாப்பிட்டுக் கொண்டு வந்த சுபாஷ், 41வது முட்டை சாப்பிடும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியபோது, முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அவை உணவுக் குழாயை அடைத்துக்கொள்ளும் என்றும் இதனால் சுவாசம் தடை படும் என்றும் இதனால் தான் சுபாஷ் மரணம் நிகழ்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யாரும் எந்த புகாரும் கொடுக்காததால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

More News

படித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்

இந்தியாவில் உள்ள ஒரு சில தரமான கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களில்

பாஜகவில் இணைந்த விஜய் பட நடிகை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறிவரும் அரசியல்வாதிகள் அதிகரித்து வருகின்றனர்.

'தளபதி 64' நாயகியின் லேட்டஸ் அப்டேட்!

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் ஒரு பக்கம் சூப்பர்ஹிட்டாகி வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

துருவ் விக்ரமின் 'ஆதித்யவர்மா' சென்சார் தகவல்கள் மற்றும் புதிய ரிலீஸ் தேதி!

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது

'ஆடை'யை அடுத்து அமலாபால் அடுத்த படத்திற்கு கிடைத்த சென்சார் சான்றிதழ்

அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் சென்சாரில் ஏ சான்றிதழ் பெற்றாலும் அந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இந்த படம் ஓரளவு திருப்திகரமாக வசூலைப் பெற்ற நிலையில் தற்போது அமலாபால் நடித்த அடுத்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது