குழந்தைகள் சாப்பிடும் உணவில் இறந்து கிடந்த எலி..!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில், சப்பாத்திக்கு உப்பினை வழங்கியது, சாப்பாட்டுக்கு மஞ்சள் கலந்த தண்ணீர், ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளி தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என பல குளறுபடிகள் நடந்தன. இந்நிலையில் தற்போது, உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு இடைநிலைக் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மதிய உணவை என்.ஜி.ஓ. நிறுவனமான ஜன் கல்யாண் சான்ஸ்தா என்ற அமைப்பு செய்து கொடுக்கிறது. இந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் 9 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More News

திருமணமான 20 நாளில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை:: கணவரே கொலை செய்தாரா?

பெற்றோரை எதிர்த்து காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் திருமணமான இருபதாவது நாளில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஐ.ஐ.டி கேரள மாணவி செல்போனில் இருந்த தகவல்கள் உண்மை. மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம், தடவியல் துறை தகவல்

சென்னை ஐ.ஐ.டியில் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கேரளா மாநிலம் கொல்லம் கிளிகொள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

நானே ஒரு பொறம்போக்கு..பரதேசி.. என்னையெல்லாம் ஒன்னுமே செய்ய முடியாது..நேற்று வெளிவந்த வீடியோவில், நித்தியானந்தா.

தனது ஆஸ்ரமத்திற்கு பிரியானந்தா என்ற பெண்ணை ஆதீனமாக்கி இருப்பதா&#

கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த நிலையிலும் டிக்டாக்: இளம்பெண்களின் அட்டகாசம்!

அமெரிக்காவில் 16 வயதேயான இரண்டு இளம்பெண்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு வளைவில் அந்த கார் கவிழ்ந்தது. இதனை அடுத்து காரிலிருந்து வெளியே வர முடியாமல்