வைரலாகி வரும் விஷால் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,November 15 2017]

நடிகர் விஷால் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது அறிந்ததே. அவரும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் விஷால் வீட்டில் ரெய்டு நடந்தபோது  எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்பட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. அதில் கோடிக்கணக்கான மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கள் ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதிகாரி ஒருவர் விஷாலை விசாரணை செய்வது போன்ற காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அந்த வீடியோவில் ஆக்சன் கிங் அர்ஜூன் திடீரென வந்து அதிகாரி போல் கேள்வி கேட்டு கொண்டிருந்தவரை மேக்கப் போடாமல் இங்க என்ன வெட்டியா இருக்க? என்று கூறி அனுப்பி வைத்தார். அப்போதுதான் அது ஒரு செட்டப் வீடியோ என்பது தெரியவந்தது.

விஷால், அர்ஜூன், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் வருமான வரி சோதனை போன்ற ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சிக்காக வைக்கப்பட்ட டூப்ளிகேட் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் தான் அவை என்பது படக்குழுவினர்களால் கூறப்பட்டது. இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

உடுமலை சங்கர் கொலை வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு தமிழகத்தையே குலுங்க வைத்த உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 12ஆம் தேதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவிற்கு சிலை வைத்தால் திறக்க தயார்: பிரபல இயக்குனர்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கோபி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'அறம்' படத்தை பாராட்டதவர்களே இல்லை என்று கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஊடக விமர்சகர்கள் வரை அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை இந்த படம் பெற்றுள்ளது. 100 வருட தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இந்த படம் கருதப்படுகிறது.

விஜய்ன்னு பேரு வச்சாலே சூப்பர் ஆயிடுறாங்க: அண்ணாதுரை ஆடியோ விழாவில் ராதிகா

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் ஆண்டனி, இயக்குனர் சீனிவாசன், தயாரிப்பாளர் ராதிகா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

சூர்யாவின் அடுத்த படத்தில் '8 தோட்டாக்கள்'' பட நடிகை

ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த நடிகை மீரா மிதுனுக்கு சூர்யாவின் அடுத்த படத்தில்

முதல்முறையாக வாழ்த்துக்களுடன் மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து கொண்ட கமல்-ரஜினி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருமே சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் பிரபலம் என்றாலும் ஒருவர் கூறிய கருத்தை இன்னொருவர் ரீடுவீட் செய்ததோ, வாழ்த்து தெரிவித்ததோ கிடையாது