வைரலாகி வரும் விஷால் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர் என்பது அறிந்ததே. அவரும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் விஷால் வீட்டில் ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்பட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. அதில் கோடிக்கணக்கான மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கள் ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதிகாரி ஒருவர் விஷாலை விசாரணை செய்வது போன்ற காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அந்த வீடியோவில் ஆக்சன் கிங் அர்ஜூன் திடீரென வந்து அதிகாரி போல் கேள்வி கேட்டு கொண்டிருந்தவரை மேக்கப் போடாமல் இங்க என்ன வெட்டியா இருக்க? என்று கூறி அனுப்பி வைத்தார். அப்போதுதான் அது ஒரு செட்டப் வீடியோ என்பது தெரியவந்தது.
விஷால், அர்ஜூன், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' படத்தில் வருமான வரி சோதனை போன்ற ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சிக்காக வைக்கப்பட்ட டூப்ளிகேட் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் தான் அவை என்பது படக்குழுவினர்களால் கூறப்பட்டது. இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Unseen Footage of IT Raid @ Vishal.. #ITRaidatVishal pic.twitter.com/ozSAOfpEaX
— Ramesh Bala (@rameshlaus) November 15, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments