உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற இத்தனை கோடியா? உதவி செய்த முகம் தெரியாத நபர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
முதுகு தண்டுவட தசை செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தை ஒன்றுக்கு முகம் தெரியாத நபர் ஒருவர் 11 கோடி கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கேரளாவை சேர்ந்த சாரங் மேனன் மற்றும் அதிதி நாயர் என்ற தம்பதியின் மகன் நிர்வான். 16 மாதங்களே ஆன இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோய் ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் 17 கோடி செலவாகும் என கூறப்பட்டதை அடுத்து இந்த பெற்றோர் க்ரவுட் ஃபண்டிங் மூலம் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.
தசை செயலிழப்பு நோய்க்கு சிகிச்சை அளிக்க சுமார் 17.5 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் கிரவுட் பண்டிங் என்ற முறையை நாடிய அவரது பெற்றோர்கள் நிதி திரட்டினார்கள்/ Zolgensma என்றழைக்கப்படும் மருந்து மட்டுமே ரூ. 16 கோடி என்றும் இந்த மருந்து உலகின் விலை மிக உயர்ந்த மருந்துகளில் ஒன்றும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தையின் பெற்றோர் நிதி திரட்டி கொண்டிருக்கும் நிலையில் திடீரென முகம் தெரியாத நபர் ஒருவர் 11 கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சிகிச்சைக்கு தேவையான மொத்த பணம் சேர்ந்து உள்ளதை அடுத்து தற்போது அந்த சிறுவனுக்கு சிகிச்சை நடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 28ஆம் தேதி வரை 3 கோடி மட்டுமே சேர்ந்த நிலையில் திடீரென முகம் தெரியாத நபர் கொடுத்த 11 கோடி காரணமாக தற்போது மொத்தம் 17 கோடி ரூபாய் திரட்டப்பட்டதாகவும் விரைவில் தங்கள் மகன் முழுமையாக காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அந்த குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உயிரை காப்பாற்ற 11 கோடி ரூபாய் கொடுத்த அந்த முகம் தெரியாத நல்ல உள்ளம் படைத்தவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout