ஒன்றரை கோடி ரூபாயை சென்னை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சாலை ஒன்றில் நள்ளிரவில் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மர்ம நபர் ஒருவர் சாலையில் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோட்டூர்புரம் காவல்நிலைய காவல்துறையினர் கடந்த ஞாயிறு அன்று நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். போலீசார் அந்த நபரை நிறுத்துமாறு கையசைத்தனர். ஆனால் அந்த மர்ம நபர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். மோட்டார் சைக்கிளின் முன்புறம் மூன்று பைகள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அந்த நபரை போலீஸ் வாகனத்தில் துரத்தினர்.
அப்போது மோட்டார் சைக்கிள் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கியபோது வண்டியின் முன் வைக்கப்பட்டிருந்த மூன்று பைகளும் கீழே விழுந்தது. போலீசார் அருகே நெருங்கிவிட்டதால் அந்த பைகளை கூட எடுக்காமல் அந்த மர்ம நபர் தப்பியோடிவிட்டார். போலீசார் அந்த பைகளை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் மொத்தம் ரூபாய் ஒரு கோடியே 56 லட்சம் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைத்த காவல்துறையினர் மர்ம நபர் வந்த பாதையில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நந்தனம் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் ஜன்னலை உடைத்து பணம் திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் செய்த விசாரணையில் தொழிலதிபரின் வீட்டில் கொள்ளையடித்த பணம் தான் மர்ம நபரிடம் இருந்து சிக்கிய பணம் என்பது தெரிய வந்தது.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அந்த தொழிலதிபர் சமீபத்தில் ரூ.5 கோடிக்கு ஒரு நிலத்தை விற்பனை செய்ததாகவும், அதில் ரூ.3.5 கோடியை வங்கியில் செலுத்திவிட்டு மீதியை வீட்டில் வைத்திருந்ததாகவும் அந்த பணம் தான் கொள்ளை போனதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து தொழிலபதிரின் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout