பெட்ரூமில் காதல் ஜோடிக்கு நடுவில் படுத்து கொண்ட மர்ம நபர்.. நடிகையின் வில்லாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

  • IndiaGlitz, [Monday,May 22 2023]

நடிகைக்கு சொந்தமான வில்லாவில் காதல் ஜோடி தங்கி இருந்த நிலையில் நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடுவில் மர்ம நபர் ஒருவர் படுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருக்கு சொந்தமாக சென்னை புறநகர் பகுதியில் வில்லா ஒன்று உள்ளது. இந்த வில்லாவில் பலரும் வாடகைக்கு எடுத்து தங்கி வருவார்கள். நீச்சல் குளம் உள்ளிட்ட வசதியுடன் உள்ள இந்த வில்லாவில் காதல் ஜோடிகள் அடிக்கடி வந்து தங்குவதுண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் காதல் ஜோடி தனது நண்பர்களுடன் இந்த வில்லாவில் வந்து தங்கி உள்ளனர். காதல் ஜோடி ஒரு அறையிலும் நண்பர்கள் ஒரு அறையிலும் இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர் ஒருவர் காதல் ஜோடி இருக்கும் அறையில் புகுந்து இருவருக்கும் நடுவில் படுத்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் அந்த மர்ம நபர் இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சி இளம் பெண் விளக்கை போட்ட போது வேறு யாரோ படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட காதலன் மற்றும் அவரது நண்பர்களும் எழுந்து அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அந்த வில்லாவில் பணிபுரிந்து வரும் சுபாஷ் என்பது தெரிய வந்தது. மேலும் சுபாஷின் செல்போனை சோதனை செய்தபோது பெண்கள் குளியல் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் சுபாஷ் மற்றும் வில்லா நிர்வாகிகளிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

யுவன் இசையில் விஜய் பாடிய ஒரே பாடல்.. 'தளபதி 68' படத்தில் பாடுவாரா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 68 படத்தின்' அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் தமன்னா.. 10 கிலோ எடை குறைந்ததா? வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து 10 கிலோ எடையை குறைக்க இருப்பதாக கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழு வாழ விடு.. அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிடும் அறிவிப்பு: 

 நடிகர் அஜித்குமார் தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ள அறிக்கை சற்றுமுன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அறிக்கைகள் அஜித்குமார் கூறியிருப்பதாவது: 

மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடலாசிரியர்.. நெகிழ்ச்சியான பதிவு..!

பிரபல பாடலாசிரியர் தனது மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நெகிழ்ச்சியான பதிவு இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் அசத்தும் 5 நடிகைகள்… யாரென்று தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம்வரும் பலர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர்கள் என்றால் நம்ப முடிகிறதா?