கங்கனா ரனாவத் வீட்டிற்கே சென்று சந்தித்த மத்திய அமைச்சர்: அடுத்த படத்தின் கேரக்டர் குறித்தும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக கங்கனா ரனாவத், தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார். அவரது கருத்திற்கு பாலிவுட்டில் மட்டுமின்றி மகாராஷ்டிர மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் நடிகர்களிடம் உள்ள போதைப்பழக்கம் குறித்தும் கங்கனா தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இந்த வழக்கில் இரண்டு பிரபல நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று கங்கனா ரனாவத்தின் வீட்டின் ஒரு பகுதி மற்றும் அலுவலகம் இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது இந்த செயல் என்று கூறப்பட்ட நிலையில் நீதிமன்றத்தின் தடை காரணமாக கங்கனா ரனாவத் அலுவலகத்தை இடிக்கும் பணியை மும்பை மாநகராட்சி நிறுத்தியது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் இன்று கங்கனாவின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ராம்தாஸ் அத்வாலே கூறியபோது, ‘கங்கனா ரணவத் அவர்களுக்கு அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியதாகவும் இந்த சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் கங்கனா தான் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தில் தலித் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் வெளிவந்தால் ஜாதி வேற்றுமையை மறந்து விடும் எண்ணம் மக்களுக்கு தோன்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாகவும் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
#WATCH: Union Minister Ramdas Athawale met actor #KanganaRanaut at her residence in Mumbai, earlier today. #Maharashtra pic.twitter.com/nyJtDWKXOk
— ANI (@ANI) September 10, 2020
Kangana Ranaut said she is not interested in politics but is interested in ensuring unity in society. She said that in her upcoming film she is playing the role of a Dalit and that caste system should be abolished: Union Minister Ramdas Athawale after meeting actor #KanganaRanaut pic.twitter.com/IK9eiHy3r8
— ANI (@ANI) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments