2021-2022 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்… சிறப்பு கவனம் எந்த துறைக்கு?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதோடு கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரு தடுப்பூசிகளை விரைவாக கொண்டு வந்துள்ளது. பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு இருக்கும். கொரோனா காலத்தில் பணியாற்றி முன்களப் பணியாளர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் கோவிட்-19 தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடியை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். “அதிக நிதி வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றும் சுகாதாரம் மற்றும் மக்கள் நலனுக்கான பட்ஜெட் செலவு 2021-2022 பட்ஜெட்டில் 2,23,846 கோடி ரூபாய். இது 137% அதிகரிப்பு என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
“ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் காற்று மாசுபாடு மற்றும் கழிவுகளை பிரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளேன் எனத் தெரிவித்து உள்ளார். அடுத்து மிஷன் போஷன் 2.0 ஐ அறிமுகப்படுத்தல் ஜல் ஜீவன் மிஷன் அர்பனை அரசு தொடங்கும் என்றும் நகர்ப்புற ஸ்வட்ச் பாரத் திட்டம் ரூ.1.4 கோடிக்கு மேல் செலவினத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்கட்டமைப்பு துறைகளுக்கான நீண்டகால நிதியத்தின் இடைவெளியை நிரப்புவதற்காக டிஎஃப்ஐயில் ஒரு மசோதாவை விரைவில் தாக்கல் செய்யப்போவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். இதனால் அடுத்த 3 ஆண்டுகளில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன என்றும் அதனை செயல்படுத்திய பின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்காக பிரத்யேக பட்ஜெட் ஒதுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
நகர்ப்புறங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க புதிய திட்டம், உள்கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புறத் தூய்மைத் திட்டம் 1.41 லட்சம் கோடி, நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 11,500 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் தொடங்க உள்ளது. மேலும் பிரத்யேக சரக்கு ரயில் பாதை அடுத்த ஆண்டு ஜுலை 22 ஆம் தேதி நிறைவடையும்.
காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மக்கள் தாங்கம் விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து மின் விநியோகம் பெறும் திட்டம். அகல ரயில் பாதைகள் 2023 க்கும் மின்மயமாகும். 27 முக்கிய நகரங்களில் மெட்ரோ பணிகள் விரிவுப்படுத்தப்படும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 49% இல் இருந்து 74% ஆக உயர்வு. பங்கு சந்தைகள் ஒழுங்குப்படுத்தி ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும். வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப் படுத்தப்படும். பாரத் பெட்ரோலியம் ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை. வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கு காப்பீடு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு ஒரு காப்பீடு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு. குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். அரசு வங்கிகளுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகமும் மும்பை- கன்னியாகுமரி இடையே புதிய தொழில் வழித் தடம் அமைக்க திட்டம். சென்னையில் 119 கி.மீ தூரத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுப் படுத்தப்படும் என்பது போன்றவை இடம் பெற்று இருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments