close
Choose your channels

ஆதார் பணபரிவர்த்தனை, ஐஆர்சிடிசி சேவை வரி ரத்து உள்பட அதிரடி அறிவிப்புகளுடன் 2017-2018ஆம் ஆண்டின் பட்ஜெட்

Wednesday, February 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2017-2018ஆம் ஆண்டின் பட்ஜெட் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. முதல்முறையாக ரயில்வே பட்ஜெட்டையும், பொது பட்ஜெட்டையும் இணைத்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் நலன், கிராமப்புற மக்கள் நலன், இளைஞர் மேம்பாடு, ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தை பேணுதல், உட்கட்டுமான மேம்பாடு, வலுவான நிறுவனங்களுக்கு பிரத்யேக நிதித்துறை, பொது சேவை, பொறுப்புகளை துரிதமாக செயல்படுத்துதல், நேர்மையானவர்களுக்கு ஏற்ற வரிவிதிப்பு, விவேகமான நிதி மேலாண்மை என முக்கியமான 10 அம்சங்கள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டதாக அருண்ஜெட்லி தனது முன்னுரையில் தெரிவித்துவிட்டு பின்னர் பட்ஜெட்டை வாசித்தார்.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்திற்கான வரி மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.

* ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் இருந்தால் 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.

* 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதாக வரி குறைப்பால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்க வரி வராது.

* கட்சிகள் இதுவரையில் ஒருவரிடம் இருந்து ரூ.20,000 வரை ரொக்கமாக நிதி பெற அனுமதி இருந்தது.

* கட்சிகளுக்கு காசோலை, மின்னணு முறை மூலம் மட்டுமே நன்கொடை தர வேண்டும்.

* அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

100 நாள் வேலை திட்டம் கண்காணிப்பு

* 100 நாள் வேலை திட்டத்தை கண்காணிக்க விண்வெளி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்.

* 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்திற்கு 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

* 10 சதவீதமாக வரி இருந்த நிலையில் 5 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

* தனி நபர் வருமன வரி கணக்கு தாக்கல் படிவம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும்.

* 2ம் நிலை நகரங்களில் குறிப்பிட்ட விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

* ஆண்டு வர்த்தகம் ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு வரி 25 சதவீதமாக குறைக்கப்படும்.

* 1.5 லட்சம் சுகாதார துணை மையங்கள் சுகாதார நல மையங்களாக மாற்றப்படும்.

* கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* ரூ.50 கோடி வரை வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வரி குறைப்பு.

* இயற்கை எரிவாயு- இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்படும்.

ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு தடை.

* ரூ.3 லட்சத்துக்கும் மேல் உள்ள ரொக்க பணப்பரிவர்த்தனைக்கு தடை விதிக்க முடிவு.

* அரசியல் கட்சிகள் நிதிபெறுவதி்ல் வெளிப்படைத் தன்மை தேவை.

* அரசியல் கட்சிகள் ஒருவரிடம் இருந்து இனி ரூ.2000 மட்டும ரொக்கமாக பெற முடியும்.

* ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் காட்டும் 76 லட்சம் பேரில் 56 லட்சம் பேர் மாத ஊதியம் பெறுவோர்.

* பணப்புழக்கம் அதிகம் இருப்பதாலேயே எளிதாக வரி ஏய்ப்பு செய்ய முடிகிறது.

* கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க கூடுதலாக ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* 2016 நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட்.

* வெளிப்படையான வங்கி டெபாசிட் விவரங்கள் எதிர்காலத்தில் வரிவசூல் அதிகரிக்க உதவும்.

* ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வோருக்கு மட்டுமே தனி சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்படும்.

* 1.72 லட்சம் பேர் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.50 லட்சமாக உள்ளதாக காட்டியுள்ளனர்.

* 24 லட்சம் பேர் மட்டுமே ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக உள்ளதாக காட்டியுள்ளனர்.

* பணப்புழக்கம் அதிகமாக இருப்பதனாலேயே வரிஏய்ப்பு அதிகம் நடக்கிறது.

* மலிவு விலை வீடு கட்டும் திட்டத்துக்கு கட்டமைப்பு அந்தஸ்து அளிக்கப்படும்.

* மலிவு விலை வீடுகளுக்கான சலுகைகள் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் தளர்க்கப்படும்.

* 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு இலக்கு.

* சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும்.

* வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் ஐந்து லட்சம் குளங்கள் ஏற்படுத்தப்படும்.

* 1.50 லட்சம் கிராமங்களில் இணையதள சேவை.

* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ- டாய்லெட் வசதி ஏற்படுத்தப்படும்.

* தலைமை தபால் அலுவலகத்தி்ல் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சிறுதொழில் கடன் வழங்க ரூ.2.44 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

* ராணுவத்திற்கான நிதி ரூ.2,74,11 கோடி ஒதுக்கீடு.

* நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 50 ஆயிரம் கிராம ஊராட்சிகள் வறுமை இல்லாதவையாக மேம்படுத்தப்படும்.

* வங்கிக்கடன் திருப்பித் தராதவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டு வரப்படும்.

* இளைஞர்கள் அறிவியலில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பினாலும் சொத்து பறிமுதல் செய்யப்படும்.

* நிதிப்பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.2 சதவீதமாக இருக்கும்.

* புதிதாக இரண்டு கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

* தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்

* ரயில் பாதுகாப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

* இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்படும்.

* போக்குவரத்து துறைக்கு ரூ.2.41 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

* அந்திய முதலீட்டு அனுமதி வாரியம் கலைக்கப்படும்.

* ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை 200லிருந்து 500 ஆக அதிகரிக்கப்படும்.

* வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்டுகளை தடுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

* ஆதார் அடிப்படையிலான பணப் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்படும்.

* ரயில் பயணிகளின் பாதுகாப்பு, தூய்மைக்கு முக்கியத்தும் தரப்படும்.

* 3,500 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

* அகல ரயில் பாதை தடத்தில் 2020க்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை எட்டப்படும்.

* மூத்த குடிமக்களுக்கு 8 சதவீதம் உறுதியான வருவாயுடன் எல்ஐசியில் திட்டம்.

* 7000 ரயில்களில் சூரிய ஒளி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

* உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளுக்கான விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நுண் சொட்டு நீர் பாசனத்துக்கு தொடக்க மூலதனம் ரூ.5,000 கோடி நிதி.

* அனைத்து உயர்கல்வி தேர்வுகளையும் சிபிஎஸ்இ உள்ளிட்ட அமைப்புகள் நடத்தாது.

* உயர்கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படும்.

* உயர்கல்வித்துறையின் பல்கலைக்கழக மானிய குழுவில் சீர்திருத்தம் செய்யப்படும்.

* கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

* பயணிகளுக்கு உதவ ரயில் பெட்டிகளில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவர்.

* நகர்புற வளர்ச்சியில் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் பங்கு இன்றியமையாததாகிறது.

* கட்டமைப்பு துறைக்கு ரூ.3.96 லட்சம் கோடி ஒதுக்கீடு.

* 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பசுமை கழிப்பறைகள் அமைக்கப்படும்.

* ஐஆர்சிடிசி தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் சேவை வரி கிடையாது.

* குஜராத், ஜார்க்கண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை.

* வெளிநாட்டு மொழிக்கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

* மூன்று கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ.1,84,000 கோடி ஒதுக்கீடு (கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி)

* மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* குஜராத், ஜார்க்கண்டில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை மையங்கள் அமைக்கப்படும்.

* கிராமப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு கடன் வட்டி குறைக்கப்படும்.

* எஸ்.சி பிரிவு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.52,393 கோடி ஒதுக்கீடு (கடந்த அண்டு ரூ.38,833 கோடி).

* இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதிய முறை உருவாக்கப்படும்.

* நாட்டில் 2019-ம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

* 2017-18 நிதியாண்டில் விவசாய வளர்ச்சி 4.1 சதவீதமாக இருக்கும்.

* கச்சா எண்ணெய் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவது சவாலாக உள்ளது.

* கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி (கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி).

* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மகளிர் பங்களிப்பு 55 சதவீதம் உயர்வு.

* அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் 2019ம் ஆண்டிற்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.

* பெணிகளின் வளர்ச்சிக்காக கிராமங்களில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்துக்காக முன்பை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஊரக, வேளாண் சார்ந்த துறைகளுக்கு 2017-18ல் ரூ.1,87,223 கோடி ஒதுக்கீடு.

* வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

* இந்தியாவை தொழில்நுட்ப பலமிக்க நாடாக மாற்றுவதே அரசின் இலக்கு.

* விவசாயிகளின் வருமானத்தை அடுத்த ஐந்து ஆண்டில் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* பால் பொருள் பதப்படுத்தும் கட்டமைப்புக்காக நபார்டு மூலம் ரூ.8000 கோடி வழங்கப்படும்.

* கிராமப்புறங்களில் நாள்தோறும் 133 கி.மீ தூரத்துக்கு புதிய சாலை அமைக்கப்படும்.

* சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 2018, மே ஒன்றாம் தேதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்படும்.

* நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 361 பில்லியன் டாலராக உள்ளது.

* ரயில்வேத்துறை சுதந்திரமாக இயங்கும்.

* வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க வழி ஏற்படும்.

* விவசாயக் கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்கு இலக்கு (கடந்த ஆண்டு சுமார் 9 லட்சம் கோடி)

* உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4 ஆக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.

* உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும் இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது.

* பயிர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.13,000 கோடி இலக்கு.(கடந்த ஆண்டு ரூ.5,500 கோடி)

* கச்சா எண்ணெய் விலையில் நிச்சயமற்ற நிலை நிலவுவது சவாலாக உள்ளது.

* பல்லாண்டு வரி ஏய்ப்பை தடுக்க பணமதிப்பு நீக்க நடவடிக்கை உதவியுள்ளது.

* பணமதிப்பு நீக்க பாதிப்பை நீக்க புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 7.7 சதவீதம் அதிகரிக்கும்.

* அமெரிக்காவின் நிதிக்கொள்கையால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

* இரண்டரை ஆண்டுகளில் பாஜக அரசு நிர்வாக சீர்திருத்தங்களை எடுத்துள்ளது.

* நாட்டின் முக்கியமான பொருளாதார காரணிகள் திருப்திகரமான உள்ளன.

* பணமதிப்பு நீக்கத்தின் விளைவு அடுத்த ஆண்டு தெரியவரும்.

* ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.

* கறுப்புப் பணத்திற்கு எதிரான பணமதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது.

* வேலைவாய்ப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய நோக்கம்.

* பணமதிப்பு நீக்கம் என்ற முக்கியமான முடிவை அரசு செயல்படுத்தியுள்ளது.

* ஜிஎஸ்டியில் ஒருமித்த கருத்தை எட்ட உதவிய அனைத்து மாநிலங்களுக்கும் நன்றி.

* பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டிற்கு நீண்ட கால பலனளிக்கும்.

* கடந்த ஓராண்டில் வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

* அரசின் கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

* வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடுகள் 2016ல் 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

* இளைஞர் நலன், வேலைவாய்ப்புக்கு அரசு முக்கியவத்தும் கொடுத்து வருகிறது.

* மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.

* உலகப் பொருளாதாரம் நிலையாக இல்லாத நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

* நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment