பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத எலிமினேஷன்.. இந்த வாரமும் மாயா தப்பித்துவிட்டாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் பூர்ணிமா மட்டும் புத்திசாலித்தனமாக 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்து விட்டு வெளியேறி விட்டார்
இந்த நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் 7 போட்டியாளர்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற விஷ்ணு தவிர மீதமுள்ள ஆறு போட்டியாளர்களும் நாமினேஷனில் உள்ளனர். இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் அல்லது போட்டியாளர்கள் யார் என்பதை அறிய பார்வையாளர்கள் ஆவலுடன் இருக்கும் நிலையில் அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவர் தான் மிகக் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்
இதில் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்து வெளியேறி விட்டதால் மாயா தான் அநேகமாக எலிமினேட் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின் படி மாயா இந்த வாரமும் தப்பித்து விட்டதாகவும் விசித்ரா தான் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரமே மாயா குறைந்த வாக்குகள் பெற்றிருந்ததாக கூறப்பட்ட நிலையில் நிக்சன் மற்றும் ரவீனா எலிமினேஷன் செய்யப்பட்டனர். இந்த வாரமும் மாயா தப்பித்து விட்டதை அடுத்து அவர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடுவார் என்றே தோன்றுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com