சின்னம் ஒதுக்காததால் சுமையில் விடுதலை சிறுத்தைகள்...! கவலையில் திமுக...!
Send us your feedback to audioarticles@vaarta.com
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்னமும் சின்னம் ஒதுக்காததால், அக்கட்சியினர் மத்தியில் மத்தியில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் போட்டியிட தனியாக இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வானூர், செய்யூர், காட்டுமன்னார் கோயில், அரக்கோணம், நாகப்பட்டினம், திருப்போரூர் உள்ளிட்டவை தான் அந்த தொகுதிகள். இதில் 5 தொகுதிகளில் அதிமுக-வை எதிர்த்தும், திருப்போரூர் தொகுதியில் மட்டும் பாஜாக-வை எதிர்த்தும் போட்டியிடப்போகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இச்சுழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்காதது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி பேச்சு வார்த்தையின் போது உதயசூரியன் கட்சியில் நிற்கச்சொல்லி ஸ்டாலின் வலியுறுத்தியும் திருமாவளவன் ஒத்துக்கொள்ளவில்லையாம். இதற்கு காரணம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்படும் என திருமா பக்கம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக 6 தொகுதிகள் மட்டும் ஒதுக்கியதால், கட்சியினரை சமாதானப்படுத்த தனிசின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என தலைவர் சார்பாக அழுத்தமாக கூறப்பட்டுவிட்டது. மேலும் எங்கள் தனித்தன்மையை காப்பாற்றவும், பாஜக கூட்டணியை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கவும் தனிச்சின்னம் தான் தங்களுக்கு உதவும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது, ஆட்சி காலத்தில் காவிரியில் இருந்து பிரச்சனையில்லாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது உள்ளிட்டவை அதிமுகா-விற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் வெற்றிவாய்ய்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக இருக்கும் என கட்சியினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் அதிமுக-கூட்டணிக்கு அதிகமாக இருப்பதால், இருகட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் முதல்வர் தீவிர பிரச்சாரம் நடத்தி வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் எந்த சின்னத்தை வைத்து ஓட்டுக்கேட்பது என்பது கேள்விக்குறியாக இருப்பதால், இது திமுகவிற்கு சற்று அதிருப்தியை அளித்துள்ளது.கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்காததால், குறைந்த கால பட்சத்தில் அவர்கள் மக்கள் மத்தியில் சின்னத்தை கொண்டுபோய் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். திருமாவளவனுக்கு இது சற்று சுமையாக இருந்தாலும், தனிச்சின்னம் கேட்டவர் அதற்கு ஏற்ற வியூகங்களை அமைத்திருப்பார் என கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments