சாலையில் நடந்து சென்றவர் மீது இடிந்து விழும் கட்டிடம்… பதற வைக்கும் வீடியோ!!!

  • IndiaGlitz, [Thursday,December 17 2020]

 

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்றவர் மீது புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல்மாடி தூண் இடிந்து விழும் காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் கட்டிடம் விழுந்ததால் படுகாயம் அடைந்த நபர் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடக்கிறார். இது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேல்மாடி கட்டிடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்து சாலையில் நடந்து சென்ற ஒருவரின்மீது சரிந்து விழுந்தது. இதனால் படுகாயம் அடைந்த அந்த நபர் பேச்சு மூச்சு இல்லாமல் சுருண்டு விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அந்த கட்டிட உரிமையாளரிடன் தற்போது போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நாடு முழுவதும் பருவமழை பெய்து வரும் நேரத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இந்நிலையில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் சரிந்து விழும் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.