கட்டுக்கடங்காத கூட்டம்: போலீஸ் தடியடியால் இரண்டு பேர் பலி

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா சமாதியை நோக்கி ஊர்வலமாக செல்லவிருப்பதால் அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்று தொண்டர்கள் முண்டியடித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாகவும், கருணாநிதியை பார்க்க ஒருசில தொண்டர்கள் தடுப்பை மீறியதன் காரணமாகவும் போலீசார் லேசான தடியடி நடித்தினர்

இந்த தடியடியால் பொதுமக்களும் திமுக தொண்டர்களும் சிதறி ஓடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மேலும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் ஒருசில நிமிடங்களில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கவிருப்பதை அடுத்து ஊர்வலம் செல்லும் பாதையில் வழிநெடுகிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More News

அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்: சீயான் விக்ரம் வருத்தம்

திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் மறைவால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்னாருக்கு இறுதி மரியாதை செய்யும் வகையில்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நேரில் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே! ஷங்கர் வருத்தம்

கருணாநிதிக்கு இன்று அதிகாலை முதல் திரையுலகினர்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில் ஒருசிலர் வெளிநாடுகளில் இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்

கருணாநிதி இறுதி ஊர்வலம் புறப்படும் நேரம் அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: தமிழக அரசு மேல்முறையீடா?

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று காலை உத்தரவிட்டதை அடுத்து