சூர்யாவுக்கு பார்சலில் வந்த விருது: வைரல் வீடியோ

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், ஓடிடியில் ரிலீஸான போதிலும் இந்த படம் மிகப்பெரிய லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்று கொடுத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சிறப்பு விருது பெற்றது என்பதும் அதேபோல் சூரரைப்போற்று படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மெல்போர்ன் இந்திய திரைப்பட குழுவினர் சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்த விருதை பார்சலில் அனுப்பி உள்ளனர். இந்த பார்சலை பிரித்து அந்த விருதை எடுக்கும் வீடியோவை சூர்யா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்