தளபதி விஜய் படத்தின் வெளிவராத பாடல்

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் பரதன் இயக்கிய 'பைரவா' திரைப்படம் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. இந்த படத்திற்கு முதல்முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற 'வரல்ல்லாம் வரல்லாம் வா' பாடல் உள்பட     அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இந்த படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டு பின்னர் ஒருசில காரணங்களுக்காக படத்தில் இடம்பெறாத பாடல்தான் 'காதல் குடில்' என்று தொடங்கும் பாடல்

பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த மெலடி பாடல் மனதை மயக்கும் அற்புதமான இசையுடனும் பாடல் வரிகளுடனும் அமைந்துள்ளது. நேற்று பாடலாசிரியர் விவேக்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இதுவரை வெளிவராத இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

More News

பிம்பத்தை உடைக்கவே குரல் கொடுத்தேன்: சிம்பு

காவிரி பிரச்சனை ஒருபக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களத்தில் உள்ளது.

காலையில் அம்மா... இரவில்... ஸ்ரீரெட்டியை அடுத்து உண்மையை உடைக்கும் இன்னொரு நடிகை

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி ஏற்கனவே 'பாகுபலி புகழ் ராணாவின் சகோதரர் உள்பட பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

பிரியா வாரியரின் புதிய கண்சிமிட்டல் வீடியோ வைரல்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ப்ரியா வாரியர் நடித்த 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசர் வெளியானது.

அமெரிக்கா: மாயமான இந்தியர் மற்றும் அவரது மகள் உடல்கள் மீட்பு

இந்தியாவை சேர்ந்த சந்தீப் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 6ஆம் தேதி அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமாகினர்.

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய்ப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படம் முதல் சமீபத்தில் 'சவரக்கத்தி' படம் வரை நடித்த நடிகை பூர்ணா நடிக்கும் அடுத்த படம் பிரமாண்டமான பேய்ப்படமாக தயாராகி வருகிறது.